ஏன் ரஜினி சார், உங்க மாப்பிள்ளையை பார்த்தால் பாவமா தெரியலையா?

தனுஷ் அளிக்கும் பேட்டிகளை பார்க்கும் போது ரஜினி சாருக்கு தன் மருமகனை பார்த்தால் பாவமாக இல்லையா என்றே கேட்கத் தோன்றுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜ...

தனுஷ் அளிக்கும் பேட்டிகளை பார்க்கும் போது ரஜினி சாருக்கு தன் மருமகனை பார்த்தால் பாவமாக இல்லையா என்றே கேட்கத் தோன்றுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று அனைத்து நடிகர்களும், நடிகைகளும் ஆசைப்படுகிறார்கள். ஆனால் அனைவரின் ஆசையும் நிறைவேறிவிடுவது இல்லை.

த்ரிஷாவே பல ஆண்டுகளாக தனது ஆசையை வெளிப்படுத்தி ஒரு வழியாக பேட்ட படத்தில் ரஜினியுடன் சேர்ந்து நடித்தார்.

தனுஷ்

ரஜினியின் மூத்த மாப்பிள்ளையான தனுஷுக்கும் அவருடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகரான தனுஷுக்கு இப்படி ஒரு ஆசை ஏற்பட்டதில் தவறே இல்லை. ஆனால் அந்த ஆசை நிறைவேறுமா என்பது தான் பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

ரஜினி

தனுஷ் பேட்டி அளிக்கும்போது எல்லாம் ரஜினி சாருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று ஏக்கத்துடன் கூறுகிறார். அண்மையில் அளித்த பேட்டியில் கூட தனது ஆசையை வெளிப்படுத்தினார். யாரோ ஒருத்தர் இப்படி ஆசைப்பட்டால் கூட அது நிறைவேற தாமதம் ஆகலாம் எனலாம். ஆனால் ரஜினியின் மருமகனுக்கே இந்த நிலையா என்று பரிதாபப்படத் தோன்றுகிறது.

காலா

பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த காலா படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரித்தார். அந்த படத்தில் ஒரு காட்சியிலாவது வந்துவிட வேண்டும் என்று அவர் முயற்சி செய்து தோல்வி அடைந்தார். தனுஷை காலா படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடிக்க வைக்க ரஜினி விரும்பவில்லை என்று அப்பொழுது கூறப்பட்டது.

மாப்பிள்ளை

ரஜினி சாருக்கு பின்னால் நின்று ஒரு காட்சியில் நடித்தால் கூடப் போதும் என்கிறார் தனுஷ். நடிப்பு ராட்சசனான அவர் இப்படி இந்த அளவுக்கு இறங்கி வந்து ஆசைப்படுகிறார். அவரை பார்த்தால் உங்களுக்கு பாவமாக தெரியவில்லையா ரஜினி சார்?. நம்ம மாப்பிள்ளை தான், கொஞ்சம் பார்த்து பண்ணுங்க. ரஜினி தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். தர்பார் படத்தில் தனுஷை கவுரவத் தோற்றத்தில் நடிக்க வைத்து அவரின் ஆசையை நிறைவேற்றுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About