ஜிஞ்சர் ஐஸ் டீயை குடித்து கோடையை கொண்டாடுங்கள்!!

கோடை வெப்பத்தை சமாளிக்கவும், உடலில் நீரிழப்பு ஏற்படாமல் தடுக்கவும், புத்துணர்வுடன் இருக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஆரோக்க...

கோடை வெப்பத்தை சமாளிக்கவும், உடலில் நீரிழப்பு ஏற்படாமல் தடுக்கவும், புத்துணர்வுடன் இருக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஆரோக்கியம் நிறைந்த பானங்களை குடிக்க வேண்டும்.  செர்ரி மற்றும் இஞ்சி சேர்த்து தயாரிக்கப்படும் ஐஸ் டீயை குடிப்பதால் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.  செர்ரி பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் என்னவென்று பார்ப்போம். 

நோய் தொற்று:

செர்ரியில் ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருப்பதால் உடலில் நோய் தொற்று ஏற்படாமல் பார்த்து கொள்ளும்.  நோய் தொற்று காரணமாக ஏற்படும் சளி, இருமல் போன்ற பிரச்சனைகளை குணப்படுத்தும். 

சரும பராமரிப்பு:

ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்த உணவை சாப்பிடுவதால் சருமம் பிரகாசிப்பதுடன், இளமை தோற்றம் தக்கவைக்கப்படுகிறது.  செர்ரி பழச்சாறு குடிப்பதால் பருக்கள், எக்ஸீமா மற்றும் வல்காரிஸ் போன்ற சரும நோய்களில் இருந்து விடுபடலாம்.  செர்ரியில் வைட்டமின் ஏ இருப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படுகிறது. 

தூக்கமின்மை:

செர்ரியில் மெலடோனின் என்னும் இரசாயனம் இருப்பதால் நரம்பு மண்டலம் ஆரோக்கியமாக இருக்கிறது.  மனதை ஆற்றுப்படுத்தி ஆழ்ந்த உறக்கத்திற்கு வழிவகுக்கிறது. 

உடல் எடை:

செர்ரியில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடை குறைக்க இதனை சாப்பிடலாம்.  நார்ச்சத்து நிறைந்த உணவுகள் செரிமானத்திற்கு உகந்தது.  மேலும் உடலில் கொழுப்பு சேராமல் பார்த்து கொள்ளும். 

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About