தமிழக மாணவர்களின் தரமான கண்டுபிடிப்பு: பெட்ரோல் பிரச்சனைக்கு அருமையான தீர்வு.!

உத்திரபிரதேசத்தில் நடைபெற்ற புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில் நமது கோவை அரசுக் கல்லூரி மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளனர்....

உத்திரபிரதேசத்தில் நடைபெற்ற புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில் நமது கோவை அரசுக் கல்லூரி மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளனர். அது என்ன கண்டுபிடிப்பு என்ற முழுமையான தகவலைப் பார்ப்போம் வாங்க...

தொழில், சமுதாயம் சார்ந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துiறியின் ஒத்துழைப்புடன், அகில இந்திய அளவில் ஹார்டுவேர் ஹெக்கத்தான் போட்டிகள்

நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக தொழில், சமுதாயம் சார்ந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான புதிய கண்டுபிடிப்புகளை மாணவர்கள் ஒரே இடத்தில் கூடி உருவாக்குவதே இந்த போட்டி.

1.5லட்சம் மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்றனர்

மேலும் கடந்த 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நாடு முழுவதிலும் 18மையங்களில் இந்த போட்டி நடத்தப்பட்டது. குறிப்பாக நாடு முழுவதும் 1.5லட்சம் மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்றனர். அதில் உத்திரபிரதேச மாநிலம் காசியாபாத் கிருஷ்ணா பொறியியல் தொழில்நுட்ப கல்லூரி மையத்தில் நடைபெற்ற ஹேக்கத்தானில் கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

மாணவர்களின் பெயர்

கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி சார்பாக பங்கேற்ற மாணவர்களின் பெயர், பாலகுமாரன், புவன்பரத், பரணி, கார்த்திக்,மவுலிதரன், ரமேஷ்,அபிநயா ஆகியோர் அடங்கிய அணி, முதலிடம் பெற்றது.

இவர்கள் கண்டுபிடித்தது என்ன?

இவர்கள், பெட்ரோல் நிலையங்களில், குறைந்த செலவில் நீராவி மீட்பு அமைப்பு' ஏற்படுத்துவதற்கான, 'ஹார்டுவேர்' வடிவமைத்துள்ளனர். வடிவமைப்பு மட்டுமின்றி அதை செயல்படுத்துவதற்கான செயல் விளக்கம் பாராட்டு பெற்றது. மேலும் அணியை தலைமையேற்று வழிநடத்தி மாணவி அபிநயா கூறியதாவது என்றவென்று பார்ப்போம்.

வளிமண்டலத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்

அபிநயா கூறியது: பெட்ரோல் நிலையங்களில், பெட்ரோல் தேக்கி வைக்கும் போதும், வாகனங்களில் நிரப்பும் போதும், ஆவியாகும் செயல்பாடுகள் அதிகளவில் உள்ளது.

இதனால், பண இழப்பு என்பது ஒரு புறம் இருப்பினும், வெளியாகும் வாயு,வளிமண்டலத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், உடல் நல பாதிப்புக்கும் வழி வகுக்கும்.பெட்ரோல் ஆவியாவதை தடுத்து, அதை மீண்டும் திரவமாக்கி பயன்படுத்தும் வகையில், ஓர் வடிவமைப்பைஉருவாக்கியுள்ளோம், காப்புரிமைக்கும் விண்ணப்பித்து விட்டோம்.

பேராசிரியர் ரமேஷ்

மேலும் முழுமையான வடிவமைப்பு தயார் செய்த பின், அதற்கு காப்புரிமை பெறுவோம், போட்டியின் மூலம் வென்ற, ஒரு லட்சம் வாயிலாக, ஆய்வுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வோ என இதற்கு வழிகாட்டியாக இருந்த பேராசிரியர் ரமேஷ் கூறியுள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About