எச்சரிக்கை! சமைக்கும் போது இந்த தவறுகளை மட்டும் ஒருபோதும் செய்து விடாதீர்கள்...!

உலகத்திலேயே மிகவும் அழகான அதேசமயம் கடினமான வேலை என்றால் அது சமைப்பதுதான். ஏனெனில் சமைக்கும் போது செய்யும் சிறிய தவறு கூட உணவின் சுவையை மாற்...

உலகத்திலேயே மிகவும் அழகான அதேசமயம் கடினமான வேலை என்றால் அது சமைப்பதுதான். ஏனெனில் சமைக்கும் போது செய்யும் சிறிய தவறு கூட உணவின் சுவையை மாற்றிவிடும். சிலசமயம் சமைக்கும் போது செய்யும் சில தவறுகள் உணவின் தன்மையையே மாற்றிவிடும்.

பாத்திரங்களை கழுவும் போது, காய்கறிகளை கழுவும் போது, தாளிக்கும் போது நீங்கள் சாதாரணமென நினைத்து செய்யும் சிறு தவறுகள் கூட உங்கள் ஆரோக்கியத்தின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இந்த பதிவில் சமைக்கும் போது நீங்கள் செய்யக்கூடாதா தவறுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

நான்-ஸ்டிக் பாத்திரங்களில் உலோக கரண்டிகளை பயன்படுத்துதல்

நான்-ஸ்டிக் பாத்திரங்களில் எப்பொழுதும் மரக்கரண்டிகளை பயன்படுத்த வேண்டும். இதில் உலோக கரண்டிகளை பயன்படுத்தும்போது அது பாத்திரத்தில் இருக்கும் உலோகப்பூச்சை சிதைக்கும். இந்த உலோகப்பூச்சு உங்கள் உணவில் கலக்கும்போது அது பல பாதிப்புகளை உண்டாக்கும்.

தவறான அளவிடும் கோப்பையைப் பயன்படுத்துதல்

சரியான அளவீட்டு கோப்பை பயன்படுத்துவதே சரியான சமையலுக்கு முக்கியமாகும். அனைத்து உணவுகளுக்கும் ஒரே அளவீட்டு கோப்பையை பயன்படுத்துவது தவறானதாகும். உணவிற்கு ஏற்றவாறு தண்ணீரை சேர்க்க கற்றுக்கொள்ளுங்கள். உணவின் சுவையில் பல மாற்றங்களை உண்டாக்கும்.

பாத்திரத்தை நிரப்புவது

சமையலுக்கு பொறுமை தேவை. பாத்திரம் முழுக்க சமையல் பொருட்களால் நிரப்புவது உங்கள் உணவிற்கு சிக்கலை உருவாக்கும். ஒவ்வொரு பொருளுக்கும் அது வேக தேவையான நேரத்தை கொடுக்க வேண்டும். அனைத்தையும் ஒரே நேரத்தில் பாத்திரத்தில் போடுவது அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும்.

நான்-ஸ்டிக் பாத்திரத்தை அதிக சூடேற்றுவது

நான்-ஸ்டிக் பாத்திரங்கள் மிதமாக வெப்பத்தில் சமைக்க வேண்டியவை ஆகும். இதனை அதிக வெப்பப்படுத்தும்போது அதிலிருக்கும் PFC கலவையை வெளியிடுகிறது. இதனால் கல்லீரல் மற்றும் செரிமான பிரச்சினைகளை உண்டாக்கும்.

இறைச்சியை சிங்க்-ல் கழுவுவது

சமைப்பதற்கு முன் இறைச்சியை நன்கு சுத்தம் கழுவும் பழக்கம் அனைவருக்கும் இருக்கிறது. ஆனால் இவ்வாறு கழுவுவது நமது கை மற்றும் சருமத்தை மாசுபடுத்துகிறது. இதனை தவிர்க்க இறைச்சியை சுடுநீரில் கழுவ வேண்டும் மேலும் சிறிது உப்பு சேர்த்து கழுவுவது நல்லது. இறைச்சியை கழுவிய பிறகு கையை சோப்பு போட்டு கழுவ மறந்து விடாதீர்கள்.

சூடான உணவுகளை குளிர்சாதன பெட்டியில் வைப்பது

வேலை காரணமாகவோ அல்லது உணவை விரைவில் குளிர்விக்க வேண்டும் என்பதற்காகவோ உணவை ஒருபோதும் குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது. உணவு அறை வெப்பநிலைக்கு வந்த பிறகு மட்டுமே குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About