கேம் ஓவர் திரை விமர்சனம்
June 15, 2019டாப்ஸி தமிழ் சினிமாவில் மரத்தை சுற்றி பாட்டு பாடும் ஹீரோயினாக அறிமுகமாகி ஹிந்தி பக்கம் சென்று பிங்க் மூலம் ஓவர் நைட்டில் உலக பேமஸ் ஆனவர். அ...
கதைக்களம்
படம் ஆரம்பத்திலேயே ஒரு பெண்ணை மர்ம கும்பல் கொலை செய்கின்றது, அதை தொடர்ந்து டாப்ஸி நியூ இயர் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட சில கசப்பான சம்பவத்தால் மன உளைச்சலில் இருக்கின்றார்.
அதை தொடர்ந்து அவருக்கு இருட்டை கண்டாலே பயமாக இருக்க, ஒரு கட்டத்தில் இவர் கையில் குத்தியிருக்கும் டாட்டூ அடிக்கடி வலிக்க ஆரம்பிக்கின்றது.
ஏன் அந்த டாட்டூ இவருக்கு வலிக்க ஆரம்பிக்கின்றது, இதற்கு பின் இருக்கும் மர்மங்கள் என்ன என்று டாப்ஸி தேட ஆரம்பிக்க, அதன் பின் நடக்கும் திகில் சம்பவங்களே இந்த கேம் ஓவர்.
படத்தை பற்றிய அலசல்
டாப்ஸி தேர்ந்தெடுத்து நடித்தாலே அது தரமான படம் தான் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார், காட்சிக்கு காட்சி அவர் பயப்படுகிறாரோ, இல்லையோ, அவர் வழியாக நமக்கு பயத்தை கடுத்துகின்றார்.
திகில் படம் எடுப்பதில் செம்ம எக்ஸ்பெட் என்பதை அஸ்வின் இதிலும் நிரூபித்துள்ளார், படத்தில் நடித்திருக்கும் நடிகர், நடிகைகள் அனைவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
அதிலும், டாப்ஸி உதவியாளராக வரும் வினோதினி எப்போதும் போல் யதார்த்த நடிப்பில் அசத்துகிறார். படமே ஒரு வீடியோ கேம் பின்னணியில் ஆரம்பித்து, அதன் வழியாக கதை சொன்ன விதம் சூப்பர்.
கண்டிப்பாக ஒரு மிகப்பெரிய இடத்தை அஸ்வின் அடைவார், படத்தின் மிகப்பெரும் பலமாக பார்க்கப்படுவது பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு தான். ரான் ஈதன் இசை கண்டிப்பாக தமிழ் சினிமாவிற்கு நல்ல வரவேற்பு.
க்ளாப்ஸ்
டாப்ஸி மற்ற நடிகர், நடிகைகள் நடிப்பு.
படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள், இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என அனைத்தும் தரம்.
படத்தின் திரைக்கதை.
பல்ப்ஸ்
அனைத்து தரப்பு அதாவது பி, சி ஆடியன்ஸுக்கு எளிதில் புரியுமா? என்றால் கேள்விக்குறி தான்.
மொத்தத்தில் ஒரு திகில் கலந்த வீடியோ கேமிற்குள் சென்று அதை வெற்றிக்கரமாக முடித்து வந்த அனுபவம் இந்த கேம் ஓவர்.
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா திரைவிமர்சனம்
June 14, 2019சினிமாவில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இன்று இளம் தலைமுறையினர் பலருக்கும் இருக்கிறது. சாதாரண பின்புலனில் இருந்து வந்தவர்களுக்கு சரியான வாய்...
கதைக்களம்
படத்தின் ஹீரோ ரியோ ராஜ், ஆர்.ஜே.விக்னேஷ் இருவரும் நண்பர்கள். Youtube ல் சாதிக்க வேண்டும் என அதுவே கதி என சுற்றி வருகிறார்கள். அவர்களின் ஆசை நிறைவேண்டும் என அவர்களின் அண்ணன் சுட்டி அரவிந்த் தன்னால் ஆன தியாகங்களை செய்கிறார்.
ஒரு நாள் திடீரென இரு மாணவிகளுக்கு நடந்த கொடுமையை கண்டு இவர்கள் அதிர்ச்சியுறுகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு புறம் பிராங்க் மூலம் ராதா ரவியிடம் அறிமுகமாகிறார்கள்.
ரியோவுக்கு ஹீரோயின் ஷிரினும் ஒரு இடத்தில் அறிமுகமாகிறார். இந்நிலையில் ஒரு நாள் பெரும் சம்பவத்தால் ரியோ மற்றும் விக்னேஷ் இருவரும் அனைத்து சானல்களிலும் பிரேக்கிங் செய்தியாக மாறுகிறார்கள்.
அருகில் இருப்பவர்களுக்கு என்ன நடந்தாலும் நமக்கு என்ன கவலை என சுயநலமாக இருப்பவர்கள் மத்தியில் கொலை சம்பவத்தை தடுக்க முயற்சி செய்கையில் இருவரின் உயிருக்கும் ஆபத்து, யார் அந்த கொலைகாரன், அவனின் நோக்கம் என்ன, சமூகம் என்ன செய்தது என்பதே இந்த கதை.
படத்தை பற்றிய அலசல்
முதலில் இப்படத்தை தயாரித்துள்ள நடிகர் சிவகார்திகேயனுக்கு நன்றி சொல்ல வேண்டும். தான் வந்த இடத்திலிருந்து சினிமாவில் சாதிக்கவேண்டும் என போராடுபவர்களுக்கு இப்படத்தின் மூலம் ஒரு வாய்ப்பினை உருவாக்கி தந்துள்ளார். கமர்சியல் விசயங்களுக்காக யோசிக்கும் இப்போதைய சூழ்நிலையில் தைரியமாக புது முயற்சியுடன் படம் தயாரித்து கொடுத்திருக்கிறார்.
டிவி, சீரியல் என கலக்கி வந்த ரியோவுக்கு இப்படம் சினிமாவில் நல்ல ஒரு ஓப்பனிங்காக அமையும். சீரியல் ஓகே. சினிமாவில் தன்னை ஹீரோவாக காட்டி திறமையை நிரூபிப்பாரா என படத்தில் தொடக்கத்தில் கேட்க வைத்த அவர் இறுதியில் நிறைவேற்றிவிட்டார் என படம் பார்ப்பவர்களின் மனம் சொல்லும்.
ஆர்.ஜே.விக்னேஷ் கலாய்ப்பதில் கெட்டிக்காரர். இப்படத்தில் அவர் செய்யும் லூட்டி அவரின் ரசிகர்களை திருப்திப்படுத்தும். ஹீரோவுக்கு இணையாக அவரும் இன்னொரு ஹீரோ போல தன்னை வெளிப்படுத்தி சிம்பிளான காமெடி ரோல் பிளே செய்துள்ளார். ஒரு நடிகராக அடுத்து தன்னை இப்படத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
பத்திரிக்கை, ஊடக துறையில் இருக்கும் இக்கட்டான சூழ்நிலைகள், அந்த பத்திரிக்கை ஊடகத்தால் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்ற தற்போதைய நிலையையும் Youtube சர்ச்சை பிரபலம் ராதா ரவி காட்டுகிறார்.
அரசியல் வாதியாக நாஞ்சில் சம்பத்தை உள்ளே கூட்டி வந்துவிட்டார்கள். சொல்லவா வேண்டும். அவர் அரசியல் அவலங்களை அள்ளி அவிழ்த்து விடுகிறார்.
ஹீரோயின் ஷிரின் பத்திரிக்கை நிரூபராக நடிகையாக தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார். அவருக்கான முக்கியத்துவமும், காட்சிகளும் படத்தில் குறைவு. ஆனாலும் நடிப்பில் நிறைவு. வாழ்த்துக்கள்..
இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் இப்படத்தின் மூலம் இக்காலத்து இளம் தலைமுறைகளின் நாடிதுடிப்புகளை கொண்டு அரசியல் சர்ச்சையில் சிக்கிய சிலரை படத்தின் மூலம் பிரதிபலித்து படம் பார்த்தவர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்.
மயில்சாமி, பிஜிலி ரமேஷ், Youtube பிரபலங்கள் என சிலரை இங்கே காணமுடிகிறது. காட்சிகள் என ஒளிப்பதிவாளர் தெளிவாக படத்தை கொண்டு செல்கிறார்.
ஷாபிர் இசையில் பாடல்கள் இதயங்களை இம்பிரஷ் செய்யும்.
கிளாப்ஸ்
ஹீரோ ரியோவுக்கு நல்ல ஓப்பனிங். வாய்ப்புகள் அடுத்தடுத்து அமையும்.
சுற்றி தவறு நடந்தால் தட்டி தைரியமாக தட்டி கேட்க வேண்டும் என்ற சோசியல் மெசேஜ்.
பல அவலங்களை காமெடி சிரிப்புடன் படங்களில் பளிச்சிட்ட விதம்.
பல்பஸ்
இன்னும் கதைக்களம் சற்று அழுத்தமாக இருந்திருக்கலாம் என ஒரு ஃபீல்.
மொத்தத்தில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா ஒரு ரியல் எண்டர்டெயின் மெண்ட். ஃபன் ஃபில்.
குடிநீர் இல்லாத பள்ளிகளுக்கு இப்படியொரு அட்டகாசமான ஏற்பாடு - அமைச்சர் செங்கோட்டையன்!
June 14, 2019தமிழகத்தில் போதிய பருவமழை இல்லாத காரணத்தால், தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. பொதுமக்கள் காலிக் குடங்களுடன் தண்ணீரைத் தேடி அலைந்து கொண்டி...
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. எனவே சென்னையில் உள்ள பள்ளிகளில் குடிநீர் பிரச்னை இருந்தால், உடனே தகவல் தெரிவிக்கலாம்.
அந்த பள்ளிகளுக்கு 24 மணி நேரத்தில் குடிநீர் வசதி செய்து தரப்படும். பள்ளிகளுக்கு தேவையான குடிநீர் வாங்க பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலம் நிதி ஏற்பாடு செய்யப்படும்.
இதன்மூலம் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் குடிக்க, கழிவறைகளில் பயன்படுத்த தண்ணீர் கிடைக்க வழி செய்யப்படும் என்று கூறினார். முன்னதாக சென்னையில் உள்ள சில தனியார் பள்ளிகள், மாணவர்களை வீட்டிலிருந்தே குடிநீரைக் கொண்டு வருமாறு உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே புத்தக மூட்டையை சுமந்து செல்லும் மாணவர்கள், தண்ணீர் பாட்டில்களை சுமந்து செல்வது பெரும் சுமையாக இருக்கும் என்று பெற்றோர் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.
இம்ரான் கான் முன்னிலையில் பாகிஸ்தானை வச்சு செஞ்ச பிரதமர் மோடி; ஷாங்காய் மாநாட்டில் செம அதிரடி!
June 14, 2019கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ் கெக் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி , தீவிரவாதத்தி...
கடந்த சனிக்கிழமை அன்று, இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்தேன். அங்கு தற்கொலைப் படை தாக்குதல் நடந்த புனித அந்தோனி தேவாலயத்தை பார்வையிட்டேன். அங்கு தான் தீவிரவாதத்தின் கோர முகத்தைக் கண்டேன். எத்தனை எத்தனை அப்பாவி உயிர்கள் பலியாகி விட்டன.
தீவிரவாதத்திற்கு நிதி வழங்கும், பாதுகாப்பு அளிக்கும், உதவி செய்யும் நாடுகள் களையப்பட வேண்டும் என்றார். அப்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அருகில் இருந்தது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளாக தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தரும் நாடாக பாகிஸ்தான் இருந்து வருகிறது.
அவர்களைக் கொண்டு இந்தியாவிற்கு தொடர்ந்து தொல்லை அளித்து வருகின்றனர். இதனை பல முறை கண்டித்தும் பாகிஸ்தான் கேட்ட பாடில்லை. சர்வதேச அமைப்புகள், வல்லரசு நாடுகள் உதவியுடன் பாகிஸ்தானை, இந்தியா தொடர்ந்து கண்டித்து வருகிறது.
ஆனால் தனது மோசமான செயல்பாட்டை நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மாநாட்டில் தொடர்ந்து பேசிய மோடி, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அங்கத்தினர்கள் அனைவரும் தீவிரவாதத்திற்கு எதிராக தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும்.
இந்த அமைப்பின் உறுப்பு நாடுகள் தீவிரவாதத்திற்கு எதிரான சர்வதேச மாநாட்டிற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இலக்கியம், கலாச்சாரமும் தான் சமூகத்தில் நேர்மறையான எண்ணங்களை விதைக்கும். இளைஞர்கள் தீவிரவாதத்தின் பக்கம் ஈர்க்கப்படாமல் தடுக்க வேண்டும்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் முழுமையான அங்கத்தினராக மாற இந்தியாவிற்கு இரண்டு ஆண்டுகள் தேவைப்பட்டது. இதுவரை எங்களால் முடிந்த அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கியுள்ளது என்று மோடி கூறினார்.
நாடு முழுவதும் 17ம் தேதி மருத்துவா்கள் வேலை நிறுத்தப் போராட்டம்
June 14, 2019நாடு முழுவதும் 17ம் தேதி மருத்துவா்கள் வேலை நிறுத்தப் போராட்டம் கொல்கத்தாவில் அரசு மருத்துவா் தாக்கப்பட்டதைக் கண்டித்து வருகின்ற 17ம் தேதி ...
கொல்கத்தாவில் அரசு மருத்துவா் தாக்கப்பட்டதைக் கண்டித்து வருகின்ற 17ம் தேதி நாடு முழுவதும் மருத்துவா்கள் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவாா்கள் என்று இந்திய மருத்துவ சங்கம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் என்ஆா்எஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 75 வயது முதியவாின் மரணத்திற்கு முறையற்ற சிகிச்சை தான் காரணம் என்று அவரது உறவினா்கள் கடந்த திங்கள் கிழமை மருத்துவா் மீது கடுமையாக தாக்குதல் நடத்தினா். தலையில் பலத்த காயமடைந்த மருத்துவா் தீவிர சிகிச்சைப் பரிவில் அனுமதிக்ப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
அரசு மருத்துவக்கல்லூாி மருத்துவா்கள் தாக்கப்பட்ட சம்பவம் சக மருத்துவா்கள் இடையே பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. மருத்துவா்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து மேற்கு வங்கம் மாநிலத்தில் கடந்த செவ்வாய்க் கிழமை முதல் மருத்துவா்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
மருத்துவா்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர மாநில அரசு சாா்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் மருத்துவா்களின் போராட்டம் நாளுக்கு நாள் தொடா்ந்து கொண்டே வருகிறது.
மேலும் மேற்கு வங்கம் மருத்துவா்களின் போராட்டத்திற்கு ஆதரவு தொிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மருத்துவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். தலைநகா் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவா்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்நிலையில் இந்திய மருத்துவ சங்கம் சா்ாபில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் மருத்துவா்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தொிவித்தும், மருத்துவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் நாடு முழுவதும் வருகின்ற 17ம் தேதி மருத்துவா்கள் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனா்.
மேலும் வருகின்ற 15, 16 ஆகிய தேதிகளில் மருத்துவா்கள் கறுப்புப் பட்டை அணிந்தும், தா்ணா, அமைதிப் பேரணி உள்ளிட்ட நிகழ்வுகளை மேற்கொள்ளவும் இந்திய மருத்துவ சங்கம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வேலை நிறுத்தப் போராட்டத்தில், அத்தியாவசிய சேவைப் பணியில் ஈடுபடும் மருத்துவா்களும், அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள மருத்துவா்களும், இந்த போராட்டத்தில் பங்கேற்க மாட்டாா்கள் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.
தண்ணி செலவ சம்பளத்துல பிடிச்சா ஓகேவா.. நோ.. அப்ப வீட்லருந்து வேலை பாருங்க.. சென்னை ஐ.டி நிறுவனங்கள்
June 13, 2019ஐ.டி நிறுவனங்களுக்கு இப்படியொரு பிரச்சனை வருமா என்று ஊழியர்களோ நினைத்துக்கூட பார்த்திருக்கிற மாட்டார்கள். ஆமாங்க.. சென்னையில் தற்போது தலைவி...
அங்குள்ள ஐ.டி நிறுவனங்கள் இங்கு அன்றாட தேவைக்குக்கூட தண்ணீர் இல்லை. ஆக ஊழியர்கள் இனி நிறுவனத்திற்கு வேலைக்கு வர வேண்டாம். அவரவர் வீட்டிலிருந்தே வேலைக்கு வாருங்கள் என்று அறிவித்துள்ளாதாம்.
இதை விட கொடுமை என்னவெனில் அடுத்த 100 நாட்களில் பாட்டில் தண்ணீருக்கே கூட தட்டுப்பாடு வரலாம் என கருதப்படுகிறது.
சரியான மழையில்லை
கடந்த 200 நாட்களாகவே சென்னையையும் அதனை சுற்றியுள்ள சரியான மழை இல்லாததால் குடி தண்ணீருக்கே மிக பஞ்சம் நிலவி வருகிறது. இந்த நிலையில் அடுத்த 3 மாதத்திற்குள் மழை வராவிட்டால் இந்த பிரச்சனை மிக பெரிய விளைவை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை பாருங்கள்
இதோடு சென்னையில் உள்ள ஐ.டி நிறுவனங்களில் 12 நிறுவனங்கள், அதன் 5000 ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய கூறியுள்ளதாம். இதே போல கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் லாரி உரிமையாளர்கள் பிரச்சனை நடந்த போது இதே போல வீட்டிலிருந்து வேலை செய்து வந்தனராம்.
600 நிறுவனங்கள்
சென்னையில் மட்டும் தரமணி டைடல் பார்க் மற்றும் சிறுசேரி சிபகாட் இடையே சுமார் 600 க்கும் மேற்பட்ட ஐ.டி நிறுவனங்களும், ஐ.டி துறை சார்ந்த நிறுவனங்களும் உள்ளன. இங்கு மொத்தம் சுமார் 3.2 லட்சம் ஊழியர்கள் உள்ளனராம். இந்த நிலையில் இந்த நிறுவனங்கள் தண்ணீர் பஞ்சத்தை தவிர்க்க பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. எனினும் தண்ணீர் பிரச்சனை தீர்ந்தபாடாக இல்லை.
வீட்டிலிருந்து தண்ணீர் கொண்டு வாங்க
அதுவும் சோலிங்க நல்லூரில் உள்ள ஃபோர்டு பிசினஸ் சர்வீசஸ் நிறுவனம் அதன் ஊழியர்களிடம் குடிப்பதற்கு தண்ணீரை அவரவர் வீட்டிரிலிருந்தே கொண்டு வர கூறியுள்ளதாம்.
ஒரு நாளைக்கு 3 கோடி லிட்டர் தண்ணீர் வேண்டும்
சென்னை ஒ.எம்.ஆரில் உள்ள ஐ.டி நிறுவனங்கள் கோடை காலாத்தில் மட்டும் ஒரு நாளைக்கு 3 கோடி லிட்டர் தண்ணீரை உபயோகப்படுத்துகின்றவாம். இதில் 60 சதவிகிதம் தண்ணீரை ஐ.டி நிறுவனங்கள் தான் பயன் படுத்துகின்றவாம், மீதமிருப்பதைதான் மற்ற நிறுவனங்கள் பயன் படுத்துகின்றவாம். இதில் கொடுமை என்னவெனில் இந்த தண்ணீர் அனைத்துமே பெரும்பாலும் வெளியில் இருந்தே கொண்டு வரப்படுகின்றன.
50% போர்வெல்லில் தண்ணிர் இருக்கு
இதே சிப்காட்டில் உள்ள 46 ஐ.டி நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு 2 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறதாம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் 17 போர்வெல்ஸ் இருக்கின்றனவாம். ஆனால் இதிலிருந்து தற்போதைக்கு 1 மில்லியன் லிட்டர் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறதாம். மீதம் தண்ணீருக்காக தற்போதைக்கு டேங்கர் லாரிகளின் மூலம் வினியோகிப்பட்டு வருகிறதாம்.
இனி வராதீங்க
இதெல்லாவற்றையும் பார்த்த பின்னரே நிறுவனங்கள் வேறு ஏதும் செய்ய இயலாத பட்சத்தில் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய கோரிக்கை வைத்துள்ளாம்.
அன்றாட தேவைக்கே திண்டாடும் மக்கள்
சென்னைக்கு குடி நீர் வழங்கும் முக்கிய ஏரிகள் அனைத்துமே தண்ணீர் இன்றி காணப்படுவதால் மக்கள் அன்றாட குடி நீருக்கே அவதிப்படும் நிலை நிலவி வருகிறது. அதே சமயம் போர்வெல்களிலும் தண்ணீர் பற்றாக்குறை பிரச்சனை மோசமாக நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.