செல்போனில் சிக்னல் குறைவதை அதிகரிப்பது எப்படி.?

ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் போது சில இடங்களில் நெட்வர்க் சிக்னல்கள் சரியாக கிடைக்காமல் போகும். அனைத்து நெட்வர்க்களும் சீராக இருக்கும் என...

ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் போது சில இடங்களில் நெட்வர்க் சிக்னல்கள் சரியாக கிடைக்காமல் போகும். அனைத்து நெட்வர்க்களும் சீராக இருக்கும் என்று கூற முடியாது. சாதாரண நிலைகளில் நெட்வர்க் சிக்னல் இல்லை என்றால் பிரச்சனை இல்லை, முக்கியமான சில சூழ்நிலைகளில் நெட்வர்க் சிக்னல் இல்லாமல் போனால் என்ன செய்வது. இது போன்ற நேரங்களில் வேறு எங்கு சிக்னல் இருக்கும் என்ற கனிப்புடன் சில சமயம் சிக்னல் இருக்கும் இடத்தினை கண்டறிய முடியும்.

இருந்தும் இது அனைத்து இடங்களிலும் வேலை செய்யாது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறான நேரங்களில் சிக்னல்கள் துள்ளியமாக இருக்கும் இடத்தினை போனில் சில நம்பர்களை டைப் செய்தே கண்டறிய முடியும். நெட்வர்க் சிக்னல்கள் குறைவாக இருக்கும் இடங்களிலும் சிறப்பான சிக்னல் கிடைக்கும் இடத்தினை கண்டறிவது எப்படி என்பதை பார்போம்.......

ஆண்ட்ராய்டு;ஆண்ட்ராய்டு பயனாளிகள் தங்களது போனின் செட்டிங்ஸ்>>சிம் ஸ்டேட்டஸ்>>சிக்னல் ஸ்ட்ரென்த் சென்றால் போதுமானது. இம்முறை கிட்காட் மற்றும் லாலிபாப் அப்டேட்டகளுக்கு பொருந்தும்.

ப்ளாக்பெரி;முன்னதாக ப்ளாக்பெரி இயங்குதளத்தில் ALT மற்றும் NMLL என டைப் செய்தால் போனில் இருக்கும் சிக்னல் தரத்தினை அறிந்து கொள்ள முடியும். தற்போதிருக்கும் அப்டேட்டில் வாடிக்கையாளர்கள் ப்ளாக்பெரி வேர்ல்டில் இருந்து சிக்னல் எனும் செயலியை பதிவிறக்கம் செய்து அறிந்து கொள்ள முடியும்.

விண்டோஸ்;பெரும்பாலான லூமியா போன்களில் ##3282# என டைப் செய்து அறிந்து கொள்ள முடியும் என்றாலும் இதே நம்பர் அனைத்து விண்டோஸ் போன்களுக்கும் பொருந்தாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐபோன்;முதலில் *3001#12345#* என டைப் செய்து கால் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். கால் பட்டனை க்ளிக் செய்தவுடன் ஃபீல்டு டெஸ்ட் மோடு திரை காணப்படும். இங்கு சிக்னல் தரம் எண்ணிக்கையில் தெரியும். உதாரணத்திற்கு -67 என்று இருக்கலாம். அடுத்து ஹோம் பட்டனை க்ளிக் செய்து ஃபீல்டு டெஸ்ட் மோடை விட்டு வெளியேறி விடலாம்.

பொதுவாக உங்களது போனின் திரையில் காணபப்டும் சிக்னல் குறியீடுகள் உண்மையானது கிடையாது. மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் முறைகளை பின்பற்றி சிக்னல் தரத்தினை கண்டறியும் போது அதன் எண்கள் பெரும்பாலும் -40 முதல் -130 வரை இருக்கும். இவ்வாறான சமயங்களில் -40 சிறப்பான சிக்னல்களை குறிப்பிடுவதாகும். -130 எண் குறிப்பிடப்பட்டால் சிக்னல் இல்லை என்பதாகும்......!

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About