அனுபவம்
சினிமா
நிகழ்வுகள்
வடிவேலு நம் வாழ்க்கையில் ஒரு அங்கம்- ஏன் தெரியுமா?
October 10, 2016
ஒவ்வொருவரும் காலையில் எழுந்தால் மீண்டும் அதே மிஷின் வாழ்க்கை என்ற சலிப்புடன் தான் பயணத்தை தொடங்குகிறார்கள். அப்படி ஒவ்வொரு நாளும் எதையோ எந்த காரணத்திற்கோ தேடி ஓடும் நமக்கு பூஸ்ட்டே வடிவேலு தான்.
யார் என்ன சொன்னாலும் சரி தமிழ் சினிமாவில் மட்டுமில்லை தமிழர்களின் வாழ்க்கையில் இருந்து கூட வடிவேலுவை பிரிக்க முடியாது. காலையில் விழித்து, இரவு தூங்குவதற்கு பல வடிவேலுக்களை நம் வாழ்வில் சந்தித்து விடலாம்.
அத்தனை கதாபாத்திரங்களையும் செய்து இன்று சமூக வலைத்தளங்களில் ஒரு தனி மொழியை உருவாக்கியவரே வடிவேலு தான்.
இன்னும் சொல்ல வேண்டுமென்றால் Vadivelu For Life தான், காலையில் கடன் காரனை பார்த்தவுடன் ‘வந்துட்டான்யா வந்துட்டா’ என்ற மாடுலேஷனில் நாம் தப்பிக்க, சிட்டி ட்ராபிக்கில் பஸ்ஸை பிடிக்கும் போது ‘ஏறி வாயா ஏறி வாயா’ என கண்டக்டரிடம் கூட ஒரு வடிவேலுவை பார்க்கலாம்.
ஒரு வழியாக ஆபிஸ் வந்து சேர்ந்தவுடன் நம் மைண்ட் வாய்ஸ் ‘இன்னைக்கு என்ன பண்ண காத்துகிட்டு இருக்கானுங்களோ’ என்று தான் யோசிக்க தோன்றும். வேலைகள் அடுக்கடுக்காக வந்துக்கொண்டே இருக்க வடிவேலு ஒரு ஆற்றை கடக்கும் போது சொல்வாரே ‘இருயா...இரு..அதான் வந்துகிட்டு தான இருக்கேன்’ என வெளியே சொல்ல முடியாமல் மனதில் சொல்வோம்.
எப்படியோ வீடு வந்து சேர்ந்ததும் ‘இவனுக்கு மத்தியில ஒரு நாள கழிக்கிறது ஒரு யுகத்த கடக்குற மாதிரி இருக்கு’ன்னு சொல்லிட்டு ‘கைப்புள்ள இன்னு ஏன் முழிச்சுருக்க தூங்கு’ன்னு சொல்லி முடிக்கிற வரை வடிவேலு இல்லாத வாழ்க்கை ஒவ்வொரு தமிழனின் வறண்ட தேசம் தான்.
இத்தனை வருடம் யாரோ ஒருவரின் வெட்டி ஈகோவால் இந்த மகா கலைஞனை நாம் தொலைத்துவிட்டோம். ஆனால், மீண்டும் நம் வாழ்க்கையின் பல தருணங்களுக்கு மைண்ட் வாய்ஸ் கொடுக்க கத்திச்சண்டையில் களம் இறங்கிவிட்டார் வடிவேலு.
அவர் இன்று போல் என்றும் பல சிரிப்பு பேக்ட்ரிகளை தொடங்கி அதில் நம்மை சந்தோஷத்தில் ஆழ்த்த, இவரின் பிறந்தநாளான இன்று தன் வாழ்த்துக்களை கூறுவோம்.

0 comments