ரஜினிகாந்த்தை நெகிழ வைத்த வாழ்வின் ஒரு நிமிடம்!

சினிமா படத்தில் என்றைக்குமே காதலுக்கு இடம் உண்டு. காதலை மையக் கருவாக கொண்ட படங்கள் தான் அப்போது இருந்து இப்போது வரை வந்துகொண்டிருக்கிறது....

சினிமா படத்தில் என்றைக்குமே காதலுக்கு இடம் உண்டு. காதலை மையக் கருவாக கொண்ட படங்கள் தான் அப்போது இருந்து இப்போது வரை வந்துகொண்டிருக்கிறது. படத்தில் நடிப்புக்காக வந்த காதல் நிஜவாழ்க்கையிலும் நிறைய பிரபலங்களுக்கு
தொடந்ததுண்டு.

இதுமட்டுமல்ல அவர்கள் காதல் உறவால் கரம் பிடித்து கணவன், மனைவியாக வாழ்கிறார்கள். இதை இன்று நாம் பார்க்க போவது அவ்வாறு காதல் செய்து திருமணம் கண்ட ரஜினிகாந்த் - லதா ஜோடியை பற்றி தான்.

சாதாரண பேருந்து நடத்துனராக இருந்த ரஜினிகாந்த் நிறைய முயற்சிகளுக்கு பிறகு பல படிகள் உயர்ந்து, இன்று அனைவரும் சூப்பர்ஸ்டார் என கொண்டாடும் முக்கிய நபர். அவர் தன் மனைவி லதாவை கரம் பிடித்த நிகழ்வே ஒரு சுவாரஸ்யம்.

லதா தன் கல்லூரி படிப்பின்போது ஒரு மாதிரி நேர்காணலுக்காக, தனது அக்காள் கணவரும், ரஜினியின் நண்பருமான ஒய்.ஜி.மகேந்திரன் மூலம் சூப்பர்ஸ்டாரை படப்பிடிப்பு தளத்தில் நேரில் சந்தித்தார்.

லதாவின் கேள்விகளுக்கெல்லாம் அவர் டக் டக் என பதில் சொல்ல நேர்காணலும் முடிந்தது. அந்த நாள் முதல் ரஜினியின் மனதில் காதல் அலைகள் துள்ளி எழுந்ததாம்.

காதல் வந்தால் எல்லோரும் காதலியை பின் தொடர்ந்து நேரடியாக காதலை தெரிவிப்பார்கள். ஆனால் அவரோ லதா, தன் நண்பனின் உறவினர் என்பதால் மரியாதையான முறையில் நண்பன் மகேந்திரனிடம், உன்னடைய மனைவியின் தங்கையை எனக்கு பிடித்திருக்கிறது. திருமணம் செய்து தருவாயா என்று கேட்டாராம் ரஜினி.

இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் யோசித்த மகேந்திரன், தன் குடும்பத்தாரிடம் கலந்து பேசி, தனது தங்கையிடமும் சம்மதம் வாங்கிவிட்டு ரஜினிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தாராம்.

பின்னர் மகிழ்ச்சியாக இவர்களின் திருமண ஏற்பாடுகள் நடந்தது. பிப்ரவரி 17, 1981 இல் அந்த இனிய திருமண நிகழ்வு திருப்பதியில் நடந்தது.

இப்படியாக கைகோர்த்தவர்கள் காதலுக்கும், திருமண உறவுக்கும் அடையாள வாழ்கிறார்கள்.

மேலும் பல...

0 comments

Blog Archive

Search This Blog