நீரிழிவுக்கு மூலிகை மருந்து... என்ன செய்யலாம்... என்ன செய்யக் கூடாது ?

மீண்டும் ஒரு முறை நடந்துள்ளது 'வைத்திய சாவு'. இம்முறை மூன்று உயிர்களை பலிவாங்கியுள்ளது. இந்தியாவில் அதிக ஆரம்ப சுகாதார நிலையங்கள், ...

மீண்டும் ஒரு முறை நடந்துள்ளது 'வைத்திய சாவு'. இம்முறை மூன்று உயிர்களை பலிவாங்கியுள்ளது. இந்தியாவில் அதிக ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராமம்,பேரூர், மாவட்ட தலைநகரங்கள் என அனைத்திலும் அரசு மருத்துவமனைகள் உள்ள மாநிலம் தமிழகம். கல்வி அறிவிலும் ஒப்பீட்டு அளவில் சிறப்பான நிலையிலே உள்ளது. ஆனாலும்  தென்காசி அருகில் நீரிழிவு நோய் போக்கும் 'நாட்டு மருந்து'  சாப்பிட்டு 3 பேர் பலியாகி உள்ள சம்பவம் போல் அடிக்கடி  நடந்து  கொண்டுதான் இருக்கிறது.

"அறிவியல்பூர்வமாக சோதனை செய்யாத, அரசிடம் முறையாக அங்கீகாரம் பெறாத எந்த ஒரு வைத்திய முறையையும் பின்பற்றுவது நல்லதல்ல என்றுதான் இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது. அவர் என்ன வகையான முலிகை,வேர் பயன்படுத்தியுள்ளார் என தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக கடும் விஷத்தன்மையுள்ள மருந்து அதில் இருந்துள்ளது. அதனால்தான் இப்படி உடனே இறந்துவிட்டனர். நாங்கள் எங்களின் பேஷன்ட்களுக்கு பரிந்துரைக்கும் டயட் கூட அரசால் அங்கீகரிக்கப்பட்ட டயட் தான் வழங்குகிறோம். நகர மக்களுக்குச் சர்க்கரை குறித்த விழிப்பு உணர்வு ஓரளவுக்கு இருக்கிறது, ஆனால் கிராமப்புறங்களில் அது இன்னும் வளரவில்லை என்றுதான் சொல்லவேண்டும். கம்பௌன்டர்களாக இருந்தவர்களோ அல்லது அடிப்படையை மட்டுமே தெரிந்துகொண்டு மருத்துவம் பார்க்கும் 'செல்ப் டாக்டர்கள்' போன்றவர்கள் இதுபோன்று வைத்தியம் பார்க்கும் வேலையில் ஈடுபடுகிறார்கள். மக்கள் பரந்து வாழும் புறநகர் பகுதிகளில் அரசு மருத்துவமனையை அணுகுவதில் தயக்கம் காட்டுகின்றனர். அண்மையில் சென்னை புறநகரில் குழந்தைகள் டெங்கு காய்ச்சலில் இறந்த சம்பவத்தில் கூட துவக்க நிலையில் அவர்கள் முறையான மருத்துவர்களிடம் செல்லவில்லை. டாக்டர் என போர்டு போட்டுக்கொண்டவர்களிடம் சென்றதாலே அப்பாவி குழந்தைகள் இறக்க நேரிட்டன.

ஒவ்வொரு டாக்டரின் கிளினிக்கிலும் அவரின் படிப்பு குறித்த விவரங்களைத் தெரிவிக்கவும். அவரின் சான்றிதழ் காப்பியை மாட்டி வைக்கவும் அரசு அறிவுறுத்துவது இதுபோன்ற போலியான நபர்கள் சிகிச்சை அளிக்க துவங்குவதால்தான். என்னிடம் வரும் சர்க்கரை நோயாளிகள் சிலர் " 'நோனி' பழச்சாறு குடிக்கிறேன் டாக்டர் இருந்தாலும் சர்க்கரை குறையவில்லை" என்கின்றனர். அப்படி ஒரு பழச்சாறினை குடிக்க அரசால் அங்கீகரிக்கப்பட்ட எந்த மருத்துவமும் பரிந்துரைக்கவில்லை என்பதே உண்மை. ஆனால் உண்மைக்கு மாறான விளம்பரம் நம் நாட்டில்தான் அதிகம். இதுவே வெளிநாட்டில் இப்படியான உத்திரவாதத்துடன் ஒரு மருந்தோ, பானமோ வெளியானால், உரிய பலன் இல்லாத பட்சத்தில் பெரியளவில் நஷ்டஈடு தரவேண்டியிருக்கும்.

என் போன்றவர்கள் அலோபதி மருத்துவர்களாலும் அரசு பல்வேறு சோதனை முடிவில் டெங்கு, ஹெபடைடிஸ் ஏ போன்றவற்றுக்கான 'நிலவேம்பு, கீழாநெல்லி' போன்றவற்றை எடுத்துக்கொள்ளச் சொல்லும்போது மறுப்பு சொல்வதில்லை. மேலும் அது வைரஸ் அழிப்பு என்கிற செயல்பாட்டுக்காக தரப்படுபவை.

நகரத்தில் உள்ள மக்கள் இதுபோன்ற நாட்டு மருத்துவத்தில் ஆர்வம் காட்டாவிட்டாலும்,  குறைந்த பட்சம் ஒவ்வொரு மாதமும் சர்க்கரை அளவைச் சோதிக்க வேண்டும் என்கிற புரிதல் கூட இல்லாமல் ஆண்டுக்கணக்கில் அதே மருந்தை உட்கொண்டு வருகின்றனர். கடைசியில் சர்க்கரை அளவு 400-500 என எகிறி அதனால் பல்வேறு தொந்தரவுக்கு ஆளாகின்றனர். நோய் குறித்த புரிதல் என்பதுதான் மருத்துவரிடம் கற்றுக்கொள்ளவேண்டிய முதல் விஷயம்" என்கிற பிரபல சர்க்கரை நோய் மருத்துவர் டாக்டர்.ஜெயலலிதா.

இது குறித்து பிரபல சித்த மருத்துவர் கு.சிவராமன் அவர்களிடம்  கேட்டபோது

"பொதுவாக சித்த மருத்துவத்தில் இரண்டு வகை மருத்துவர்கள் வைத்தியம் செய்து வருகின்றனர். அரசு சித்த மருத்துவ கல்லூரியில் முறையாக படித்து பட்டம் பெற்று வைத்தியம் பார்ப்பவர்கள் ஒரு வகை. பரம்பரை பரம்பரையாக சித்த மருத்துவம் செய்பவர்கள் இரண்டாம் வகை. இதில் இரண்டு வகையினரும் அரசிடம் பதிவு செய்துதான் வைத்தியம் செய்து வருவார்கள். இந்த இரண்டு வகையிலும் இல்லாமல் தாங்கள் அறிந்து கொண்டதை வைத்து அடுத்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பவர்களைப் போலி மருத்துவர்கள் என்றுதான் சொல்லவேண்டும். அப்படி அரசிடம் பதிவு பெறாத மருத்துவர்களிடம் மக்கள்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

இந்த மருத்துவத்துறையில்தான் கல்லூரியிலேயே மருந்தைத் தயாரிக்கவும் படித்து வெளி வருகிறோம்.பரம்பரை பரம்பரையாக ப்ராக்டிஸ் செய்பவர்களும் அதற்கான பயிற்சி பெற்று இருப்பார்கள். எனவே முறையாகப் படித்தவர்களாக இருந்தாலும் மருந்தைத் தயாரிக்கும்போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். சில நோய்களைக் கட்டுப்பாட்டில்தான் வைக்க முடியும். முழுமையாக 100% குணப்படுத்த முடியாது. இந்திய மருத்துவதுறையும் சரி, நவீன மருத்துவ துறையும் சரி அதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளைக் கொடுத்துள்ளனர்.  அதன் அடிப்படையில் சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில்தான் வைக்க முடியும்.அதிலும் வாழ்க்கை முறை, உணவு, மருந்து என அனைத்தும் மருத்துவரின் சொல்படி பின்பற்றினால்தான் சரியாக இருக்கமுடியும். இப்படி இருக்கும்போது 'என்னிடம் ஒரு மூலிகை இருக்கிறது. அது முற்றிலுமாக நோயைக் குணப்படுத்துகிறது" என்று சொன்னாலே அது போலி மருத்துவர்களாகத்தான் இருக்க முடியும். இப்படியான ஆட்களிடம் மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அரசும் தயவு தாட்சன்யம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இதுபோன்ற நிகழ்வுகளின் பின் பெரிய அளவில் நடவடிக்கைகளை எடுக்காமல் போவதால்தான் பல்வேறு நோய்களை தீர்க்கிறோம் என விளம்பரங்கள் செய்து அழைக்கும் அளவுக்குச் சென்றுள்ளது.  அப்பாவி மக்கள் இப்படி வெளிப்படையான விளம்பரங்களை நம்பத்தான் செய்வார்கள். இதை கட்டுக்குள் கொண்டுவருவது அரசின் கடமையாகும். நான் சொல்வது நவீனம், சித்தா மற்றும் பாரம்பரியம் என அனைத்து வகை வைத்திய முறைகளை பின்பற்றுபவர்கள் அளிக்கும் விளம்பரங்களைத்தான்.

இந்திய மருத்துவ முறைக்கான 'ஆயுஷ்' அமைப்பின் வழிகாட்டுதலின் கீழ் ஜி.எம்.பி என்கிற வழிமுறைகளின் பின்னால்தான் மருந்துகளைத் தயாரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த மருந்தாக இருந்தாலும் ஜி.எம்.பி தரத்தின் அடிப்படையில் அரசில் பதிவு செய்தவர்கள் மட்டுமே மருந்து கொடுக்கமுடியும். கடைகளில் வாங்கும் சித்த, ஆயுர்வேத, ஹோமியோபதி மருந்துகள் ஜி.எம்.பி முத்திரை பெற்றுள்ளதா எனச் சோதித்த பின்னரே வாங்க வேண்டும். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் பரம்பரை வைத்தியரும் அல்ல, முறையான கல்வி கற்றவரும் அல்ல, சித்த மருத்துவத்துக்கும் அவருக்கும் எந்த சம்மந்தமும் இருப்பதாக தெரியவில்லை, அவர் யாரென்றே தெரியவில்லை. இப்படி யாரோ ஒருவர் மருந்து தருகிறார் குணமாகிறது எனக் கண்டதையும் வாங்கி உண்டால் இப்படித்தான் உயிராபத்தில் போய் முடியும். இது கடைசியில் பல்லாண்டு காலம் படித்து பட்டம் பெற்ற மருத்துவர்களுக்கு தேவையில்லாமல் அவப்பெயர் ஏற்படுவதில் போய் முடிகிறது.

மக்கள் சித்த மருத்துவத்தின் பால் நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் அனைத்து ஆரம்ப சுகாதார மையங்களிலும் சித்த மருத்துவரை அரசு நியமித்துள்ளது. ஒவ்வொரு 30 கிலோ மீட்டருக்கும் ஒரு அரசு சித்த மருத்துவர் உள்ளார் அவரை அணுகலாம்" என்கிறார்.

இதுபோன்று போலி மருத்துவர்கள் ஒரு முறை கைது செய்யப்பட்டாலும் மீண்டும் வேறு ஊரில் வேறு இடத்தில் வேலையைக்காட்டத் தொடங்கிவிடுகிறார்கள். அரசு மட்டுமே இதை முடிவுக்குக் கொண்டுவரமுடியும். இதற்கு முன் வெற்றிகரமாக கள்ளச்சாராயத்தையும், லாட்டரியையும் முடிவுக்குக் கொண்டுவந்தது போல்

மேலும் பல...

3 comments

  1. sivaraman ji why none of siddha doctors come forward to treat tamilnadu c.m

    ReplyDelete
  2. Who is going to allow them to treat her ?

    ReplyDelete
  3. Who is going to allow them to treat her ?

    ReplyDelete

Search This Blog

Blog Archive

About