வாவ்... இவங்கள்லாம் வில்லாதி வில்லன்கள் மக்களே! #UnsungVillains

பரங்கிமலை சைஸில் ஆஜானுபாகுவான அடியாட்கள், சொந்தமாக இரும்புத் தொழிற்சாலை வைக்கும் அளவுக்கு கத்தி கபடாக்கள், சர்சர்ரென மின்னலாய்க் கடக்கும் ச...

பரங்கிமலை சைஸில் ஆஜானுபாகுவான அடியாட்கள், சொந்தமாக இரும்புத் தொழிற்சாலை வைக்கும் அளவுக்கு கத்தி கபடாக்கள், சர்சர்ரென மின்னலாய்க் கடக்கும் சுமோக்கள் - இவை மட்டும்தான் வில்லத்தனம் என்பதில்லை. ஒற்றைப் பார்வையில், நடந்து வரும் தோரணையில், ஒரு க்ளோசப் ஷாட்டில் நம் கிட்னியை ஓவர்டைம் பார்க்கவைக்கும் சுரீர் வில்லன்கள் எல்லாம் தமிழ் சினிமாவில் இருந்திருக்கிறார்கள். என்ன, அப்போது மீம்களும், சோஷியல் மீடியாக்களும் இல்லாததால் அவர்களைக் கொண்டாட முடியவில்லை. அதனாலென்ன, இப்போது கொண்டாடி விடுவோம்.

ஆர்.பி.விஸ்வம்:


'அறுவடை நாள்', 'புது வசந்தம்', 'சீவலப்பேரி பாண்டி' எனப் பல படங்களில் வில்லத்தனம் காட்டியவர். கருப்பு நிறமும் முரட்டு முகமுமாய் இவர் ஃப்ரேமில் வந்தாலே ரசிகர்களுக்கு திகில் கிளம்பும். விதிவிலக்காய் 'உருவம்' படத்தில் நல்லது செய்யும் சாமியாராய் நடித்தார். ரசிகர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. தொடர்ந்து சில படங்களில் முரட்டுத்தனம் காட்டியவர் பின் காணாமல் போனார். தமிழ்சினிமா கொண்டாட மறந்த திறமையான நடிகர்களுள் இவரும் ஒருவர். மிஸ் யூ விஸ்வம் சார்!

செந்தாமரை:


80-களில் ஹீரோக்களுக்கு இணையாக ஹிட்கள் கொடுத்த வில்லன். முறுக்கு மீசையும் அலட்சிய சிரிப்பும் செந்தாமரை ஸ்பெஷல். ஹீரோக்களிடம் வசனம் பேசும்போது லேசாக ஜெர்க் கொடுப்பது இவரின் ட்ரேட் மார்க். ரஜினி, கமல், ராமராஜன், மோகன் என அந்தக் கால ஸ்டார்கள் அத்தனைப் பேரையும் தாண்டி ஸ்கீரினில் தெரிந்த சிங்கிள் சிங்கம். 'வீடு' படத்தில் ஒரே ஒரு சீனில்தான் வருவார். ஆனால் அது... க்ளாஸ்! 90-களில் இளம் ஹீரோக்களின் வரவுக்குப் பிறகு புதுப்புது வில்லன்கள் முளைக்க இவரை மறந்தேவிட்டது தமிழ் சினிமா.

சலீம் கவுஸ்:


கோலிவுட் ரசிகர்களுக்கு இவர் ஜிந்தாவாக அறிமுகம். கமல், பிரபு என அறிமுகமான முதல் தமிழ்ப் படத்திலேயே எக்கச்சக்க ஸ்டார்கள். அதையெல்லாம் தாண்டி ஃப்ரீ ஹிட் சிக்ஸ் அடித்து ஸ்கோர் செய்தார். அதன் பின் 'சின்னக்கவுண்டர்' படத்தில் கேப்டனை எதிர்த்து அவர் அடித்தது செஞ்சுரி. தொடர்ந்து 'மகுடம்', 'தர்மசீலன்', 'திருடா திருடா' என வரிசையாக ஸ்கோர் செய்தவர் பத்தாண்டு பிரேக்கிற்குப் பிறகு 'ரெட்' படத்தில் நடித்தார். அதன்பின் 'தாஸ்'. பின் ஒரு பெரிய பிரேக். அடுத்து தளபதியுடன் 'வேட்டைக்காரன்' படத்தில். இப்போது அமைதியாக மும்பையில் வாசம் செய்து வருகிறார்.

திலகன்:


தயக்கமே இல்லாமல் சொல்லலாம் இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத அம்சம் திலகன் என. 'வரணும் பழைய பன்னீர்செல்வமா வரணும்' எனத் தமிழில் அறிமுகமான 'சத்ரியன்' படத்தில் கரகர குரலில் இவர் சொன்னதைக் கேட்டு ரசிகர்களும் பதறியதே இவரின் வெற்றிக்கு சாட்சி. தமிழில் அவ்வப்போது தலைகாட்டினாலும் மலையாளத்தில் தான் கெத்து என்பதை படத்திற்கொரு முறை நிரூபித்தார். ஆனாலும் மல்லுவுட் இவரை சண்டைக்காரராகவே பார்த்தது. ஷூட்டிங்கின்போதே மயங்கி விழுந்து மருத்துவமனையில் அஸ்தமித்தது இந்தச் சூரியன்.


சரண்ராஜ்:


ரஜினியின் நம்பிக்கைக்குரிய தளபதியாகவும், நேருக்கு நேர் மோதும் வில்லனாகவும், குணசித்திர நடிகராகவும் கலந்துகட்டி நடித்த ஒரே நடிகர் இவராகத்தான் இருப்பார். 'பணக்காரன்', 'தர்மதுரை', 'பாண்டியன்', 'வீரா', 'பாட்ஷா' என எக்கச்சக்கப் படங்கள் ரஜினியுடன். நடுவே ஜென்டில்மேனில் முரட்டு போலீஸ்காரர் வேஷம். அதன்பின் அம்மன் படங்களில் தலை காட்டியவர் 'ஜி' படத்தில் அஜித்திற்கு எதிராய் அரசியல் செய்தார். பின்னர் வழக்கம்போல இவரையும் தமிழ் சினிமா மறந்தேவிட்டது.

அனில் முரளி:


இவர் டிஜிட்டல் யுகத்து நடிகர்தான். ஆனாலும் பெரிதாக ரீச் ஆகவில்லை. வெறும் பார்வையிலேயே மிரட்டும் டெரர் ஆசாமி. 'ஆறு மெழுகுவர்த்திகள்' படத்தில் மலையாளி கேரக்டரில் இவர் செய்யும் வில்லத்தனம் ஹப்ப்ப்பா! அதன்பின் 'நிமிர்ந்து நில்', 'கணிதன்' என வரிசையாகக் காட்டு காட்டென காட்டியவர் லேட்டஸ்டாக 'அப்பா' படத்திலும் ஸ்கோர் செய்தார். இவரை சரியாகப் பயன்படுத்தினால் தமிழுக்கு இன்னொரு சூப்பர் வில்லன் ரெடி.

ஆர்.கே சுரேஷ்:


இந்த லிஸ்ட்டில் கடைக்குட்டி. தயாரிப்பாளராக, விநியோகஸ்தராக சினிமாப் பயணத்தைத் தொடங்கியவரை மிரட்டி உருட்டும் வில்லனாக 'தாரை தப்பட்டை'யில் வார்த்தெடுத்தார் பாலா. தெக்கத்தி வில்லனாய் மண்மணம் மாறாமல் பொருந்திப் போவது இவரின் ஸ்பெஷல். அதன்பின் 'மருது', 'தர்மதுரை' என வரிசையாக அரிதாரம் பூசியவருக்கு அடுத்தடுத்து படங்கள் ரிலீஸுக்கு வெயிட்டிங். இதே உருட்டலும் மிரட்டலும் தொடர்ந்தால் சீக்கிரமே தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டட் வில்லனாகி பட்டியலில் இருக்கும் சீனியர்களின் புகழை நெருங்கலாம்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About