எவ்ளோ அடிச்சாலும் தாங்குறாரே கமல்? அம்மாவுக்காக பிறந்த நாள் கேன்சேல்!

‘ஒரு வேட்டி கட்டிய தமிழன்தான் பிரதமராக வருவார்’ என்று ப.சிதம்பரம் நூல் வெளியீட்டு விழாவில் பேசிவிட்டு வந்ததிலிருந்தே கமல் வீட்டு பால் பாயாச...

‘ஒரு வேட்டி கட்டிய தமிழன்தான் பிரதமராக வருவார்’ என்று ப.சிதம்பரம் நூல் வெளியீட்டு விழாவில் பேசிவிட்டு வந்ததிலிருந்தே கமல் வீட்டு பால் பாயாசத்தில் சர்க்கரைக்கு பதிலாக ஒரே உப்பு! அதற்கப்புறம் கமல்ஹாசனை உண்டு இல்லை என்று ஆக்கியது விதி. முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்ட ஒரு விழாவில், ரஜினி கமல் இளையராஜா மூவருக்கும் கூட சேர் மறுக்கப்பட்டு, நிற்க வைக்கப்பட்டார்கள். “அதெல்லாம் அந்த காலம்… அதுக்கென்ன இப்போ?” என்று மறக்கப் பழகிய ரஜினியும் கமலும், பழசை மறந்து முதல்வருடன் நட்பு கொண்டதுதான் நல்ல விஷயம்.

மீண்டும் முதல்வர் பொறுப்பேற்றுக் கொண்ட விழாவில், முதல் ஆளாக கலந்து கொண்டார் ரஜினி. இப்படி கலையுலகத்தில் அரசியலும் கலக்கப்பட்டு வருவதால், சில நல்ல விஷயங்களையோ, கெட்ட விஷயங்களையோ கூட சுற்று சூழல் பார்த்து செய்ய வேண்டியதாக இருக்கிறது. கமல் பிறந்த நாள் விவகாரமும் அப்படிதான் என்று சொல்ல முடியாது.

முதல்வர் மருத்துவமனையில் இருக்கும் போது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் அவசியம் இல்லாத விஷயம்தான். கமலும் தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்தான் முதல்வரின் உடல் நிலை காரணமாக டி.ராஜேந்தரும் தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தை கேன்சல் செய்தார்.

கமல், டி.ஆர் செயல்கள் பாராட்டுக்குரியவைதான். அதிலென்ன சந்தேகம்?

மேலும் பல...

0 comments

Blog Archive

Search This Blog