செப்டம்பரில் கலக்கிய, சொதப்பிய படங்கள் - ஒரு பார்வை

மாதம் மாதம் என இல்லை வாரா வாரம் நிறைய தமிழ் படங்கள் வெளியாகிறது. அதிலும் ஒரே நாளில் 5,6 படங்கள் எல்லாம் ரிலீசாவது உண்டு. அப்படி செப்டம்பர...

மாதம் மாதம் என இல்லை வாரா வாரம் நிறைய தமிழ் படங்கள் வெளியாகிறது. அதிலும் ஒரே நாளில் 5,6 படங்கள் எல்லாம் ரிலீசாவது உண்டு.

அப்படி செப்டம்பர் மாதத்திலும் நிறைய படங்கள் வெளியாகியது. அதில் எந்த படம் பாஸ் மார்க் வாங்கியது, எந்த படம் தோற்றது என்பதை தற்போது பார்ப்போம்.

செப்டம்பர் 2

கிடாரி, குற்றமே தண்டனை, தகடு, இளமை ஊஞ்சல் என நான்கு படங்கள் வெளியானது. கிடாரி படம் மட்டுமே நல்ல வசூலை அள்ளியது. ஆனால் இவர்கள் போட்ட பணம் வந்திருக்குமா என்று தெரியவில்லை. குற்றமே தண்டனை படம் ரசிகர்களை ஏமாற்றியது என்று சொல்லலாம்.

மற்ற இரண்டு படங்கள் வந்ததா என்றே ரசிகர்களுக்கு தெரிந்திருக்காது.

செப்டம்பர் 8

விக்ரம், நயன்தாரா நடித்த இருமுகன் படம் வெளியாகி இருந்தது. படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றதோடு பாக்ஸ் ஆபிஸிலும் கலக்கியது.

செப்டம்பர் 9

கலாபவன் மணி தமிழில் நடித்த கடைசி படமான புதுசா நான் பொறந்தேன் என்ற படம் வெளியாகி இருந்தது.

செப்டம்பர் 16

கர்மா, பகிரி, நாயகி, சதுரம்2, உச்சத்துல சிவா ஆகிய படங்கள் வெளியானது. இதில் திரிஷா நடித்த நாயகி படம் மட்டுமே ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பை பெற்றது.

செப்டம்பர் 22

தனுஷின் தொடரி படம் வெளியாகி இருந்தது. அதிக எதிர்ப்பார்ப்பு இருந்த இப்படத்திற்கு ரசிகர்களிடம் ரெட் சிக்னல் தான் கிடைத்தது.

செப்டம்பர் 23

ஆண்டவன் கட்டளை, ஒறுத்தல், மதுரக்காரங்கே போன்ற படங்கள் வெளியானது. விஜய் சேதுபதி, ரித்திகா நடித்த ஆண்டவன் கட்டளை படத்துக்கு நல்ல விமர்சனம் கிடைத்தாலும் வசூலில் பாதிப்பு ஏற்பட்டது.

செப்டம்பர் 30

கள்ளாட்டம், கொள்ளிடம், மேற்கு முகப்பேர் ஸ்ரீகனகதுர்கா, நுண்ணுணர்வு, திருமால் பெருமை போன்ற படங்கள் எண்ணிக்கைக்கு மட்டுமே உதவியது.

செப்டம்பர் மாதம் மட்டும் மொத்தம் 23 படங்கள் வெளியாகி இருக்கிறது.

இதில் இருமுகன் மட்டுமே ரூ. 100 கோடி வசூலித்துள்ளது. கிடாரி சுமாராக வசூல் செய்திருந்தது. தொடரி, ஆண்டவன் கட்டளை பெரிய வரவேற்பு பெறவில்லை என்று கூறலாம்.

மேலும் பல...

0 comments

Blog Archive

Search This Blog