வடிவேலு - சூரி 'கத்திச் சண்டை'யில் சேர்ந்து நடித்திருக்கிறார்களா? - இயக்குநர் சுராஜ் பதில்

ஒவ்வொரு ஆண்டும் சொன்ன தேதியில் படத்தை ரிலீஸ் செய்வது விஷாலின் வழக்கம். அது பூஜை,ஆம்பளை வர தொடர்ந்தது.விஷால், வடிவேலு, சூரி நடித்துவரும் ...

ஒவ்வொரு ஆண்டும் சொன்ன தேதியில் படத்தை ரிலீஸ் செய்வது விஷாலின் வழக்கம். அது பூஜை,ஆம்பளை வர தொடர்ந்தது.விஷால், வடிவேலு, சூரி நடித்துவரும் 'கத்திச் சண்டை' படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்வதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. இப்போது திடீரென நவம்பர் இரண்டாம் வாரத்தில் வெளியாகப் போவதாக கூறியுள்ளார் விஷால். என்னதான் நடந்தது என்பது குறித்து 'கத்திச் சண்டை' இயக்குனர் சுராஜிடம் பேசினோம்.



’’கார்த்திக்காக 'கத்திச் சண்டை' படம் தீபாவளி கழித்து ரிலீஸ் செய்யப் போவதாகச் சொல்கிறார்களே!’’


                 ’’ 'கத்திச் சண்டை' படத்தின் ஷூட்டிங் முழுவதும் முடிந்து விட்டது.   கார்த்தியின் 'காஷ்மோரா' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாவதால் 'கத்திச் சண்டை' ரிலீஸ் தள்ளிப் போகிறது என்று சிலர் சொல்வது தவறு.  உண்மையில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வேலைகள் பாக்கி இருப்பதால் தீபாவளி முடிந்து இரண்டு வாரம் கழித்து 'கத்திச் சண்டை ரிலீஸாகிறது. தீபாவளி அன்று ஒரேநாளில் மூன்று பெரிய படங்கள்  வெளியானால் தியேட்டர்கள் கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது என்று விநியோகஸ்தர்கள் சொன்னார்கள்.   தமிழகத்தில் 45 சென்டர்கள்  இருந்தால் பண்டிகை காலத்தில் வெளியிடும் மூன்று படங்களுக்கு தலா 15  சென்டர்கள் மட்டுமே கிடைப்பதாக விநியோகஸ்தர்கள்  சொல்கிறார்கள். 'கத்திச் சண்டை' படம் விஷால், வடிவேலு, சூரி என்று பெரிய பட்ஜெட் படம் தீபாவளி கழித்து ரிலீஸானால் 45- சென்டர்களிலும் வெளியாகும்!’’



 ‘'தலைநகரம்' நாய் சேகர், 'மருமதமலை' என்கவுன்டர் ஏகாம்பரம், 'கத்திச் சண்டை'யில் வடிவேலு கேரக்டர் பெயர் என்ன?’


                          ’வடிவேலு சார் ஒரு லெஜன்ட்.  தமிழ் சினிமாவில் எத்தனையோ  நடிகர்கள், டைரக்டர்கள் 'என் படத்துல காமெடி வேஷத்துல நடிக்கணும்' என வடிவேலுவிடம் கேட்டுக் கொண்டே இருந்தது எனக்கு நல்லாவே தெரியும். என்னுடைய 'கத்திச் சண்டை' படத்தில் காமெடி நடிகராக மீண்டும் ரீ-என்ட்ரி ஆகி இருப்பது என்னுடைய பெரிய பாக்கியம். 'நாய் சேகர்', 'என்கவுன்டர் ஏகாம்பரம் மாதிரி 'கத்திச் சண்டை'யில் வடிவேலு நடிக்கும் கேரக்டர் பெயர் டாக்டர் பூத்ரி. முன்பு வடிவேலு நடித்து வெளிவந்த காமெடி காட்சிகளை எல்லாம் 'டாக்டர் பூத்ரி' வேஷம் தூக்கி சாப்பிடுவிடும் என்பது உறுதி!’’



’’உங்களுடைய எல்லா படங்களிலும் ஷோலோவாக நடித்து காமெடியில் கலக்கிய வடிவேலு 'கத்திச் சண்டை'யில்  சூரியும் நடிப்பது தெரிந்தும் எப்படி ஒப்புக்கொண்டார்?’’


 ’’என்மீது கொண்ட நம்பிக்கையால்தான் இந்த படத்தில் நடிக்கவே ஒப்புக்கொண்டார். இந்த படத்தில் இரண்டாம் பாதியில் வரும் வடிவேலு கேரக்டர்  தியேட்டரையே அதகளப்படுத்தும். வடிவேலு - சூரி இரண்டு பேரும் சந்தித்துப்  பேசும் ஒரு முக்கியமான காட்சியில் கைதட்டல் நிச்சயம் காதைப் பிளக்கும்!’’  

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About