மங்கள்யான் எடுத்த படம் நேஷ்னல் ஜியோகிராஃபிக் இதழில்..!

செவ்வாய் கிரகத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்ய இந்தியாவால் விண்ணில் ஏவப்பட்ட மங்கள்யான் செயற்கைகோள் எடுத்த புகைப்படம் நேஷனல் ஜியோகிராஃபிக் இதழின...

செவ்வாய் கிரகத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்ய இந்தியாவால் விண்ணில் ஏவப்பட்ட மங்கள்யான் செயற்கைகோள் எடுத்த புகைப்படம் நேஷனல் ஜியோகிராஃபிக் இதழின் அட்டைப்படத்தில் வந்துள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு, இந்தியா மங்கள்யானை விண்ணில் ஏவிய போது, ஆறு மாத காலமே அது தாக்குப்பிடிக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது அது மூன்று ஆண்டுகளையும் தாண்டி ஆராய்ச்சி பணியை செய்து வருகிறது. மற்ற நாடுகளை ஒப்பிடும் போது மிகக் குறைந்த விலையில் உருவாக்கி செலுத்தப்பட்ட மங்கள்யானில், மிகக் குறைந்த விலையிலான கேமராவே பொருத்தப்பட்டிருந்தது. அந்த கேமராவால் எடுக்கப்பட்ட புகைப்படம் தான், தற்போது நேஷ்னல் ஜியோகிராஃபிக் இதழில் வெளிவந்துள்ளது.

இதுவரை செவ்வாய் கிரகத்தின் தரமான புகைப்படம் மிகக் குறைவாகவே எடுக்கப்பட்டுள்ளது. மங்கள்யான் எடுத்த புகைப்படம் தரமாக இருக்கவே தான் நேஷனல் ஜியோகிராஃபிக் இதழ் அதை அட்டைப்படத்தில் பயன்படுத்தி உள்ளது என்று கூறப்படுகிறது. 

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About