அனுபவம்
நிகழ்வுகள்
கறுப்பு பணம் மாற்றினால் ஏழு ஆண்டு சிறை எச்சரிக்கும் வருமானவரித்துறை
November 20, 2016
கறுப்பு பணத்தை சட்ட விரோதமாக மாற்ற முயற்சி செய்தால் ஏழு ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது. கணக்கில் வராத கறுப்பு பணத்தை பிறரது வங்கி கணக்கில் செலுத்தினால் இந்த நடவடிக்கை என்று வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக கடந்த 8-ஆம் தேதிக்கு பிறகு கணக்கில் வராமல் ரூ.200 கோடி கறுப்பு பணம் இருப்பதாக வருமானவரித்துறை கண்டறிந்ததாகவும், இதையடுத்து பல அதிரடி ரெய்டுகள் நடத்தப்பட்டதாகவும் வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ரெய்டுகள் மூலம் ரூ.50 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வருமானவரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 comments