வருமான வரி சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி வரிமான வரி சட்டத்திருத்த மசோதாவை, மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். இதையடுத்து வருமான வரி சட்டத்திருத்த...

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி வரிமான வரி சட்டத்திருத்த மசோதாவை, மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். இதையடுத்து வருமான வரி சட்டத்திருத்த மசோதா மக்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, கணக்கில் வராத வருமானத்துக்கு 30% வரி, 33% கூடுதல் வரி, 10% அபராதம் விதிக்கப்படும். வங்கிகளில் ரூ.2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்து, டிசம்பர் 30-ம் தேதிக்கு முன் தாமாக வந்து தகவல் தருபவர்களுக்கு இந்த வரி விதிக்கப்படும். டிசம்பர் 30-ம் தேதிக்கு பிறகு கறுப்புப் பணம்  குறித்து வருமான வரித்துறை கண்டுபிடித்தால் அவர்களுக்கு 75% வரி, 10% அபராதம் விதிக்கப்படும். மேலும் கணக்கில் வராமல் டெபாசிட் செய்த தொகையில் 25% பணத்தை நான்கு ஆண்டுகளுக்கு வெளியில் எடுக்க முடியாது. எதிர்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   

மேலும் பல...

0 comments

Blog Archive