சசிகலாவை மிரட்டிய மோடி? உண்மையில் நடந்தது என்ன?.. படிங்க நீங்களே மோடிக்கு நன்றி சொல்லுவீங்க!..

ஜெயலலிதா மரணம் அடைவதற்கு சில நிமிடங்கள் முன்பு முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழநிசாமியை சசிகலா தேர்வு செய்து வைத்திருந்ததாகவும், ஆனால் மோடிய...

ஜெயலலிதா மரணம் அடைவதற்கு சில நிமிடங்கள் முன்பு முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழநிசாமியை சசிகலா தேர்வு செய்து வைத்திருந்ததாகவும், ஆனால் மோடியின் மிரட்டலை அடுத்தே திடீரென பன்னீர்செல்வம் முதல்வர் பதவி ஏற்றுக்கொண்டதாகவும் ஃபேஸ்புக்கில் ஒரு பதிவு வெளிவந்துள்ளது. இது உண்மை என்றால் தமிழகத்தை மன்னார்குடி மாஃபியாக்களில் இருந்து மோடி காப்பாற்றியதற்கு அனைவரும் நன்றி சொல்ல வேண்டும். இதோ அந்த பதிவு

5-12-2016 (நேற்று முன்தினம்) “மன்னார்குடி மாஃபியா” நரேந்திர மோடி என்றால் யார் என்று புரிந்துக் கொண்டது.

மாலை 5:05 PM : அதிமுக எம் எல் ஏக்கள் பன்னீர்செல்வத்தை மட்டும் தவிர்த்து விட்டு அப்பல்லோவில் சந்திக்கிறார்கள். சசிகலாதான் அதிமுக தலைவர் என்று தேர்ந்தெடுக்கவும், சசிகலா குடும்பத்தின் நெருங்கிய தொடர்புடைய எடப்பாடி பழனிசாமி புதிய முதல்வராகவும் தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்படுகிறது

மாலை 5:45 PM: தில்லியில் இருந்து வரும் ஒரு அழைப்பு சசிகலா & கோ வின் இந்த சந்திப்பையும், முடிவையும் நிறுத்த சொல்லி வருகிறது.

மாலை 6:04 : மோடி அவர்களின் காபினெட்டில் இருக்கும் ஒரு திறமைமிக்க வழக்கறிஞர் பெண், அப்பல்லோவுக்கு வருகை புரிகிறார். சசிகலா & கோ உடன் சந்திப்பை நிகழ்த்துகிறார்.

மாலை 6:57 PM: தமிழக அரசை கைப்பற்றினால், மத்திய அரசில் இருந்து சசிகலா குடும்பம் எப்படிப்பட்ட விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை அவர் தெளிவாக விளக்கி முடிக்கிறார்.

மாலை 7:10 PM: சசிகலா & கொ, இரண்டாவது மாடியில் உள்ள‌.அறை எண் 207 சந்திக்கின்றது. நெடிய விவாதத்திற்கு பிறகு மோடி அவர்களின் இந்த செக் மேட்டை அவர்கள் உணர்கிறார்கள். தங்கள் திட்டத்தை கைவிடுகிறார்கள்

இரவு 11:10 PM: அதிமுக எம் எல் ஏக்கள் மீண்டும் இரண்டாவது முறை (இம்முறை பன்னீர் செல்வம் பங்கெடுக்கிறார் ) சந்திக்கிறார்கள். மோடி அவர்களின் தேர்வான பன்னீர் செல்வம் முதல்வராக அறிவிக்கப்படுகிறார்.

இரவு 12:10 (6-10-2016) : மான்புமிகு முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இறந்ததாக அறிவிக்கப்படுகிறார்.

இரவு 12 : 50 ஓ பன்னீர் செல்வம் முதல்வராக பதவியேற்கிறார். ஜெயலலிதா அவர்கள் இருக்கையில் இருந்த அதே அமைச்சர்களே இடம் பெறுகிறார்கள். இதுதான் அந்த பதிவு. இப்போது சொல்லுங்கள், மோடிக்கு அனைவரும் நன்றி சொல்வோமா!.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About