அனுபவம்
சினிமா
நிகழ்வுகள்
அரசியலில் வெற்றிடம்! நிரப்புவாரா ரஜினி? பிரபல ஜோதிடர் கமுக்கமான கமென்ட்!
December 08, 2016
அம்மா உடல்நிலை ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்ட நாளில் இருந்தே ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் ஜெ.வின் பக்கத்து வீட்டுக்காரர் பக்கம்தான் இருந்தது. அவர்தான் ரஜினி என்பதை
குட்டிக் குழந்தைகள் கூட சட்டென்று சொல்லிவிடும். கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக “வருவேன். வர வேண்டிய நேரத்தில் கண்டிப்பா வருவேன்” என்றெல்லாம் தான் நடித்து வந்த சினிமாக்களில் முன்னோட்டம் விட்டுக் கொண்டிருந்த ரஜினிக்கு, அந்த நேரம் இதுதான் என்பது தெரிந்திருக்கும். தெரிய வேண்டும் என்றெல்லாம் அவரது ரசிகர்களுக்கும் எண்ணம் இருந்தது.
அதிமுகவின் சிம்ம கர்ஜனை ஓய்ந்து அமைதியாக படுத்திருக்கும் அந்த இறுதி நேரத்தில், அவருக்கு மலர் வளையம் வைக்க வந்த ரஜினியை பார்த்த மக்களும் கூட, ஓவென்று ஆரவாரம் செய்து தங்கள் அன்பை வெளிப்படுத்தியதை பார்க்க முடிந்தது. ஆனால், ரஜினி இனிமேலாவது கட்சி ஆரம்பிப்பாரா? மத்தியில் ஆளும் மோடிக்கும் ரஜினிக்கும் இருக்கும் நட்பு, இனிமேலாவது பிரயோஜனமான ஒரு திசையை நோக்கி பயணிக்குமா? என்றெல்லாம் ஜனங்களுக்கும் ஆர்வம் வர ஆரம்பித்திருக்கிறது. இந்த நிலையில்தான், தமிழ்நாட்டில் புகழ் பெற்ற அந்த ஜோதிடரை சந்தித்தோம்.
“என் பெயரையெல்லாம் போட்றாதீங்க. ரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரன்னு மட்டும் சொல்லிடுறேன்” என்று நம்மிடம் பேச ஆரம்பித்தார் அவர்.
ரஜினியோட நட்சத்திரம் திருவோணம். மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் நட்சத்திரமும் திருவோணம். அவருக்கு இல்லாத செல்வாக்கா? ரசிகர்கள் கூட்டமா? ஆனால் அவர் கட்சி ஆரம்பித்தாரே… என்னாச்சு? ரஜினி கட்சி ஆரம்பித்தாலும் அதே நிலைமைதான் தொடரும். இந்த ஜோதிட பலன் ரஜினிக்கும் தெரிந்திருக்கும். அதனால்தான் பலரும் வற்புறுத்திய போதெல்லாம், அமைதியாக இருந்துவிட்டார்.
“இப்போதல்ல… எப்போதுமே அவர் அரசியலுக்கு வர மாட்டார். வெளியில் இருந்தே சிங்கம் போல கர்ஜனை செய்துவிட்டு போக வேண்டியதுதான். உள்ளே வந்தால் சிங்கத்தை எலியாக்கிவிடும் அவரது ராசி” என்றபடி தனது ஜாதக பலனை முடித்து வைத்தார்.
அட… க்ளைமாக்ஸ் இப்படியாகிருச்சே?

0 comments