ஜெயலலிதா மீது கேரள அரசின் கரிசனம்... தமிழக செய்தித்துறையின் மெளனம்!

ஜெயலலிதா மறைவு காரணமாக இந்தியாவே ஸ்தம்பித்து விட்டது. பல மாநில அரசுகளும் சட்டசபை நிகழ்வுகளை ரத்து செய்தன. பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்...

ஜெயலலிதா மறைவு காரணமாக இந்தியாவே ஸ்தம்பித்து விட்டது. பல மாநில அரசுகளும் சட்டசபை நிகழ்வுகளை ரத்து செய்தன. பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.
ஒடிஷா , கேரள அரசுகள் மூன்று நாட்கள் அரசு முறை துக்கம் அறிவித்துள்ளன. ஆந்திரா, தெலங்கான மாநிலங்களில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் தமிழகம் போலவே பாலைவனமாகின. ஆந்திராவில் சித்தூர், திருப்பதி நகரங்கள் பெரும் சோகத்தில் மூழ்கின. தெலங்கானாவில் செகந்திரபாத் நகருக்கும் ஜெயலலிதாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. செகந்திரபாத் அருகேயுள்ள ஜெடிமட்லா கிராமத்தில்தான் ஜெயலலிதாவின் பண்ணை வீடு இருக்கிறது. இந்த பண்ணை வீட்டை ஒட்டி, தேசிய நெடுஞ்சாலை எண்.44 செல்கிறது. இந்த சாலை அருகேதான் ஜெயலலிதாவின் திராட்டைச் தோட்டம் உள்ளது. அரசியலில் நுழைவதற்கு முன்பே ஜெயலிலதா இதனை வாங்கி விட்டார்.

அகில இந்தியத் தலைவர்கள் அனைவருமே சென்னைக்கு வந்து ஜெயலலிதாவின் உடலுக்கு நேரடியாக அஞ்சலி செலுத்தினர். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, உபி முதல்வர் அகிலேஷ் யாதவ் என ஏராளமான அகில இந்தியத் தலைவர்களும் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தமிழகத்துடன் எப்போதும் போட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் இரு மாநில முதல்வர்களும் கூட, ஜெயலலிதாவின் மறைவை முன்னிட்டு மிகுந்த கவலையுடன் வந்திருந்தனர். கேரளத்தில் 3 நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது. பள்ளிக் கல்லூரிகளுக்கு அரசு அலுவலகங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டது. கர்நாடகாவிலும் அரசு முறை துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது.

தமிழகத்துக்கும் அண்டை மாநிலங்களான கேரளாவுக்கும் கர்நாடாகாவுக்கும் எத்தனையோ பிரச்னைகள் உண்டு. கேரளாவுடன் முல்லை பெரியாறு பிரச்னை. கர்நாடாகாவுடன் காவிரி பிரச்னை இன்னும் அணைந்த பாடில்லை. இரு மாநில முதல்வர்களும் தமிழக முதல்வர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டேதான் இருப்பார்கள். தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு கேரள,. கர்நாடக அரசுகள் துக்கம் அனுஷ்டித்தது உண்மையிலேயே ஆரோக்கியமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. கேரளா ஒரு படி மேல் போய் அரசு விடுமுறையே அளித்து விட்டது. 3 நாட்கள் அனைத்து அரசு நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டு விட்டன.

அதுமட்டுமல்ல, ஜெயலிலதாவின் இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்காக கேரள கவர்னர் சதாசிவம் கேரளத்தின் தற்போதைய முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, கேரள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா ஆகியோர் ஒரே விமானத்தில் சென்னைக்கு வருகை தந்தனர். விமான நிலையத்தில் இருந்து ஒரே காரில் ராஜாஜி அரங்கத்துக்கு வருகை தந்து ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அஞ்சலி செலுத்தியதோடு போய் விடவில்லை. தமிழில் பெரும்பாலான பத்திரிகைகளில் கேரள அரசு ஒரு விளம்பரம் வெளியிட்டுள்ளது. அதில் 'வெள்ளத்தனைய மலர் நீட்டம்; மாந்தர் தம் உள்ளத்தனையது உயர்வு'- என்ற திருக்குளை உதாரணம் காட்டி ஜெயலலிதா புகைப்படத்துடன் விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. கேரள அரசின் இந்த செயல் சமூக வலைதளங்களில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. ஏராளமானோர் அதனை பகிர்ந்து வருகின்றனர்.

தமிழக அரசு எத்தனையோ விளம்பரங்களை வெளியிட்டுள்ளது. முதல்வரின் மறைவுக்கு ஒரு விளம்பரம் கூட வெளியிடப்படவில்லை. அதே வேளையில், கேரள அரசு திருக்குறளை உதாரணம் காட்டி மறைந்த நமது முதல்வரை கவுரவப்படுத்தியுள்ளது. அந்த திருக்குறள் கேரள அரசுக்கும் நிசசயம் பொருந்தும்!

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About