சினிமா
திரைவிமர்சனம்
எங்க அம்மா ராணி.....திரைவிமர்சனம்
May 11, 2017
தமிழ் சினிமாவில் ஹீரோயின்களை மைப்படுத்தி வரும் படங்கள் வெகு குறைவு. அந்த வகையில் தொடர்ந்து தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பவர் தன்ஷிகா. இவர் நடிப்பில் பாணி இயக்கத்தில் இன்று வெளிவந்துள்ள படம் எங்க அம்மா ராணி.
கதைக்களம்
தன்ஷிகா மலேசியாவில் ஒருவரை திருமணம் செய்து இரட்டை குழந்தைகளுக்கு அம்மாவாக இந்தியா திரும்ப முடியாமல் தவித்து வருகின்றார், தன்ஷிகாவின் கணவர் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல, அவர் எங்கு இருக்கின்றார் என தெரியாத நிலை.
இந்நிலையில் தன்ஷிகாவின் மூத்த மகள் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு இறக்க, இரட்டையர்கள் என்பதால் அந்த நோய் அடுத்தவருக்கும் பரவுகின்றது.
ஏதாவது குளிர் பிரதேசம் சென்றால் அவரை காப்பாற்றலாம் என சொல்ல, வேறு இடத்திற்கு தன்ஷிகா தன் மகளுடன் குடிபெயர்கின்றார்.
அந்த இடத்தில் பல அமானுஷிய விஷயங்கள் நடக்க, அதன் பின் என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
தன்ஷிகா இதற்கு முன் பரதேசி படத்திலேயே ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்தவர் தான், இதில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்துள்ளார், வளரும் போதே இப்படி துணிந்து நடிப்பது கண்டிப்பாக மனம் திறந்து பாராட்டாலாம், அவரும் தன் நடிப்பை சிறப்பாக கொடுத்துள்ளார்.
படத்தில் இரட்டையர்களாக நடித்த குழந்தைகள் வர்ணிகா, வர்ஷா, இதில் வர்ணிகாவே படத்தில் பல காட்சிகளில் வருவதால் அதிகம் கவர்கின்றார், குட்டி குட்டி எக்ஸ்பிரஷன்களில் மனதை கொள்ளை கொள்கின்றார்.
முதல் பாதி கொஞ்சம் எமோஷ்னலாக செல்ல, இரண்டாம் பாதி என்ன ஆகப்போகின்றதோ என எதிர்ப்பார்க்க, அடுத்தடுத்து வரும் அமானுஷிய காட்சிகள் படத்தில் எந்த இடத்திலும் ஒட்டவில்லை.
அதிலும் குழந்தைக்கு ஆவி பிடிக்கின்றது போன்ற காட்சிகள், அந்த ஆவியை தன்ஷிகா ஏற்றுக்கொள்வது என யதார்த்தம் மீறிய விஷயம். கிளைமேக்ஸ் நோ கமெண்ட்ஸ்.
இளையராஜாவின் பின்னணி இசை படத்தின் மிகப்பெரிய பலம். ஒளிப்பதிவு மலேசியாவில் அழகாக படம் பிடித்து காட்டியுள்ளது, முன் பாதியில் காட்டிய எமோஷ்னல், யதார்த்தத்தை இரண்டாம் பாதியிலும் காட்டியிருக்கலாம் பாணி.
க்ளாப்ஸ்
தன்ஷிகா படத்தின் முதல் பாதி.
இளையராஜ பின்னணி இசை. குழந்தைகளின் நடிப்பு
பல்ப்ஸ்
இரண்டாம் பாதி, நம்பக்கத்தன்மை இல்லாத கிளைமேக்ஸ்.
மொத்தத்தில் உறவிற்கான முக்கியத்துவத்தை அழகாக காட்டியிருந்தாலும், இன்னும் கொஞ்சம் யதார்த்தமாக கொண்டு சென்றிருந்தால் இன்னுமே பலராலும் ரசிக்கப்பட்டு இருப்பார் இந்த ராணி.

0 comments