'மொட்டை போட்டு புருவத்தையும் எடுத்த மாதிரி இருக்கிறது இசை!'- இளையராஜா ஆவேசம்!

இசையுலகில் தவிர்க்க முடியாதவராக இருக்கும் இசைஞானி இளையராஜா, இன்றைய இசை இருக்கும் நிலை மிகவும் வேதனை தருவதாக கூறியிருக்கிறார். இந்திய மொழி...

இசையுலகில் தவிர்க்க முடியாதவராக இருக்கும் இசைஞானி இளையராஜா, இன்றைய இசை இருக்கும் நிலை மிகவும் வேதனை தருவதாக கூறியிருக்கிறார்.

இந்திய மொழிகள் பலவற்றில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரம் படங்களுக்கும் மேல் இசையமைத்து மாபெரும் சாதனை படைத்தவர் இளையராஜா. ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமானின் குரு இவர்.

இன்றளவும் மக்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்துள்ள பெரும்பாலான பாடல்கள் இவருடையதாகத்தான் இருக்கும். அத்தகையை இசையை வழங்கியவர் இன்றைய இசையின் நிலை குறித்து பெரிதும் கவலை தெரிவித்துள்ளார்.

தனது ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் இசைக்குழுவினரிடம் தனது வருத்தத்தை கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, "சினிமாவில் கையை காலை ஆட்டுவது போல ஆகிவிட்டது இன்றைய இசை. இப்போதெல்லாம் யாரும் பல்வேறு இசைக்கலைஞர்களுடன் பாடகர்களுடன் சேர்ந்து இசையமைப்பது இல்லை. ஏனோதானோ என்று எதையோ செய்து கொண்டிருக்கிறோம்.
இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்
'மக்களை இணைத்து ஆட்சியை அகற்றுவோம்' - மு.க. ஸ்டாலின்

நல்ல ட்யூன் இல்லை. இசையில் உயிர் இல்லை. இசை என்பது எவ்வளவு உயர்ந்தது. எத்தனை ராகங்கள், எத்தனை பாவங்கள். இவை இன்றைய பாடல்கள் எவற்றிலும் இருப்பதில்லை. திருப்பதிக்குப் போய் மொட்டை போட்டுவிட்டு, புருவத்தையும் சேர்த்து வழித்தது மாதிரி இருக்கிறது இன்றைய இசை. இந்தியா முழுக்க இந்த நிலைதான். இசை உலகமே சிதைந்து கிடக்கிறது" என்று மனம் வருந்தி பேசியிருக்கிறார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About