‘கும்கி 2' படத்தில் எல்லாமே புதுசுதான்- பிரபுசாலமன்

பிரபுசாலமன் இயக்கிய  'கும்கி' படத்தில் கும்கி யானைகள் மட்டுமன்றி விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் உள்ளிட்டோரும் அறிமுகமானார்கள். திரு...

பிரபுசாலமன் இயக்கிய  'கும்கி' படத்தில் கும்கி யானைகள் மட்டுமன்றி விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் உள்ளிட்டோரும் அறிமுகமானார்கள்.

திருப்பதி பிரதர்ஸ் லிங்குசாமி தயாரித்த 'கும்கி' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் தற்போது பிரபுசாலமன் ஈடுபட்டு வருகிறார் என்று கேள்விப்பட்டு அவரைத் தொடர்புகொண்டோம்.  'கும்கி 2' படத்தை நான் இயக்கப்போவது உண்மைதான். ஆனால், படத்தில் நடிக்கும் நாயகன்,  நாயகி இன்னும் ஒப்பந்தமாகவில்லை.

புதுமுகங்களாக நான் தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைத்தவுடன் படம் ஷூட்டிங் ஆரம்பமாகும். படத்துக்கான வேலைகள் போயிட்டுயிருக்கு.  படத்தின் இசையமைப்பாளர் முதல் நடிகர்கள் வரை புதியவர்களை வைத்துதான் இந்தப் படத்தை உருவாக்கப் போகிறேன். ஆனால், படத்தின் பெயர் 'கும்கி 2' தான். விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்'' என்றார்.


மேலும் பல...

0 comments

Blog Archive