உலகமெங்கும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி புகழ்பெற்ற 'பிக் பிரதர், பிக் பாஸ்' நிகழ்ச்சியை கமலுடன் கைகோத்து தமிழுக்கு கொண்டு வருகிறது விஜய் டிவி. நிகழ்ச்சி தொகுப்பாளராக கமல் சின்னத்திரையில் கால் பதிப்பதாலேயே 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின்
எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. ரியாலிட்டி நிகழ்ச்சியான இதில் மொத்தம் 14 பிரபலங்கள் பங்கேற்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் 100 நாள்கள் தங்க வேண்டும். அந்த வீடு முழுவதும் மொத்தமாக 30 கேமராக்கள் இருக்கும். போன், இணையம், கடிகாரம், செய்தித்தாள் என எதுவும் அந்த வீட்டில் இருக்காது. போட்டியாளர்களுக்கு கிடைக்கும் இந்த 100 நாள்களில், யார் சவால்களை தாக்குப் பிடித்து வெற்றி பெறப் போகிறார் என்பதுதான் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் கான்செப்ட். இந்த நிகழ்ச்சியின் ஃபர்ஸ்ட் லுக் சிறிது நாள்களுக்கு முன்பு ரிலீஸாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இன்று 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் ட்ரெய்லர் பத்திரிகையாளர் சந்திப்பின்போது வெளியானது. இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன், தொகுப்பாளினி டிடி மற்றும் விஜய் டிவியின் நிறுவனர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு கமல் அளித்த பதில் இதோ...
'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் தமிழ் வெர்ஷனுக்கும் இந்தி வெர்ஷனுக்கும் என்ன வித்தியாசம் இருக்கும்?
மொழியே ஒரு வித்தியாசம் தான். மொழியைத் தாண்டி பெரிய வித்தியாசம் எனக்குத் தெரியவில்லை.
இந்தியில் அமிதாப் பச்சன் மற்றும் சல்மான் கான் தொகுத்து வழங்கிய 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் யாருடைய நிகழ்ச்சி உங்களுக்கு பிடித்திருந்தது?
அமிதாப்பை பல நிகழ்ச்சிகளில் ஏற்கெனவே பார்த்து விட்டதால் சல்மான் கான் தொகுத்து வழங்கிய 'பிக் பாஸ்' நிகழ்ச்சிதான் எனக்கு பிடித்திருந்தது. சல்மான் கான் எளிமையாகவும், எதார்த்தமாகவும் செய்து இருந்தார்.
'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் அரசியல்வாதி யாராவது பங்கேற்பார்களா?
அரசியல்வாதிகள் யாரும் இருக்க மாட்டாங்கனு நம்புறேன். பிரபலங்களுடன் சாமான்ய மனிதர் யாராவது இருப்பாங்கனு நினைக்கிறேன்.
30 கேமராக்கள் இருக்கும் ஒரு வீட்டில் பிரபலங்கள் எப்படி எதார்த்தமாக இருக்கவும், பேசவும் முடியும்?
முடியும். நாங்களே சில நேரம் கேமரா இருப்பது தெரியாமல் மனதில் இருப்பதே வெளிப்படையாக பேசி வம்புகளில் மாட்டிக்கொள்வதில்லையா? அதே மாதிரிதான் கேமரா இருக்கு என்பதையே போட்டியாளர்கள் மறந்து விடுவார்கள்.
'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குப் பதிலாக சமூக அக்கறையுடைய 'சத்யமேவ ஜெயதே' போன்ற நிகழ்ச்சியை நடத்தலாமே?
நான் என் வாழ்க்கையில் தனிப்பட்ட முறையில் 'சத்யமேவ ஜெயதே' நிகழ்ச்சியில் செய்வதைவிட பல நல்ல விஷயங்களை செஞ்சிட்டுதான் இருக்கேன். இதை நான் என் தனிப்பெருமைக்காக இங்கே சொல்லலாம்.
இன்றைய அரசியல் சூழலில் நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா?
போட்டி அரசியலில் நான் இல்லை. தமிழ் உணர்வுள்ள யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அரசியல் பணம் சம்பாதிக்கும் தொழில் இல்லை. சேவை செய்யும் இடம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அரசியல் சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி சொன்னதைப் பற்றி?
சிஸ்டம் சரியில்லை என்று ரஜினி சொன்னதில் தவறு ஏதுமில்லை. அது வித்தியாசமானது இல்லை.
ஜூன் 25 ஆம் தேதி முதல் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது. இதற்கான பிரமாண்ட செட் சென்னையில் போடப்பட்டுள்ளது. கமல் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியைப் பார்க்க அவரது ரசிகர்கள் ஆவலோடு இருக்கின்றனர்.

0 comments