ஜூன் 25-ம் தேதி முதல் கமலின் 'பிக் பாஸ்'.!

சின்னத்திரையில் கமல் தொகுத்து வழங்கப்போகும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை டிவி-யில் பார்க்க ரசிகர்கள் அனைவரும் காத்துக்கொண்டிருக்கின்றனர...


சின்னத்திரையில் கமல் தொகுத்து வழங்கப்போகும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை டிவி-யில் பார்க்க ரசிகர்கள் அனைவரும் காத்துக்கொண்டிருக்கின்றனர். ரியாலிட்டி நிகழ்ச்சியான இதில் மொத்தம் 14 பிரபலங்கள் பங்கேற்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் 100 நாள்கள் தங்க வேண்டும். அந்த வீடு முழுவதிலும் மொத்தமாக 30 கேமராக்கள் இருக்கும். போன், இணையம்,
கடிகாரம், செய்தித்தாள் என எதுவும் அந்த வீட்டில் இருக்காது.

இதில், சவால்களைக் கடந்து யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பதுதான் போட்டியின் கான்செப்ட். 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் சில நாள்களுக்கு முன்பு ரிலீஸாகி ஹிட் அடித்தது. இந்தப் போட்டியில் கலந்துகொள்ளும் 14 பிரபலங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இந்த மாதம் 25-ம் தேதி முதல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8.30 மணி முதல் 10 மணி வரையிலும் 'பிக் பாஸ்' ஒளிபரப்பாகும். இதில் கலந்துகொள்ளும்
14 பிரபலங்களை நிகழ்ச்சியின் முதல் எபிசோட்டில் கமல் அறிமுகப்படுத்தவுள்ளார்
.

மேலும் பல...

0 comments

Blog Archive