நம்மைப் பாதிக்கும் ஜி.எஸ்.டி-யின் இந்த 3 வரிகளைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

ஒரு பொருளை உற்பத்தி செய்து அதனை விற்பனைக்குக் கொண்டு வர மத்திய, மாநில அரசுகளுக்குப் பல வரிகளைச் செலுத்த வேண்டியுள்ளது. இதனால், ஒரு பொருளின்...

ஒரு பொருளை உற்பத்தி செய்து அதனை விற்பனைக்குக் கொண்டு வர மத்திய, மாநில அரசுகளுக்குப் பல வரிகளைச் செலுத்த வேண்டியுள்ளது. இதனால், ஒரு பொருளின் விலையானது அதன் உற்பத்தி செலவைவிட மிக அதிகளவில் அதிகரித்து காணப்படுகிறது. இப்போது இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் ஒரே தீர்வாக ஜி.எஸ்.டி வந்துள்ளது.

உதாரணமாக, காரின் உதிரிப் பாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு முக்கிய மூலப்பொருள் இரும்பு. இதை ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து வாங்கும்போது சிஎஸ்டி (Central Sales Tax) என்று சொல்லப்படும் மத்திய விற்பனை வரி செலுத்த வேண்டும். உற்பத்தி செய்த பொருளை மீண்டும் வேறு மாநிலத்துக்கு அனுப்பும் போதும் சிஎஸ்டி வரி செலுத்த வேண்டியிருக்கும். அந்த உதிரிப் பாகங்களைப் பயன்படுத்தி, கார் தயாரித்து அதை மீண்டும் தமிழகத்துக்கே அனுப்பும்போது மீண்டும் சிஎஸ்டி வரி செலுத்த வேண்டும். இந்த சிஎஸ்டி வரிக்கு, வரி விலக்கு பெற முடியாது. எனவே, இந்த வரித் தொகை முழுவதும் உற்பத்திப் பொருளின் விலையில் சேர்க்கப்படும். இதுமட்டுமில்லாமல் விற்பனை நுழைவு வரி உள்பட பலதரப்பட்ட வரிகள் வசூலிக்கப்படுகின்றன. இப்போது ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி-ல் மூன்று வரிகள்!

ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு வரும்போது, சிஜிஎஸ்டி (CGST), எஸ்ஜிஎஸ்டி (SGST) மற்றும் ஐஜிஎஸ்டி (IGST) என 3 வகையான சரக்கு மற்றும் சேவை வரிகள் நடைமுறைக்கு வரும். இதில் சிஜிஎஸ்டி என்பது மத்திய அரசின் ஜிஎஸ்டி (Central GST). இந்த வருவாய் ழுழுவதும் மத்திய அரசுக்குச் செல்லும். அடுத்தது, எஸ்ஜிஎஸ்டி என்பது மாநில அரசின் ஜிஎஸ்டி (State GST). இது மாநிலங்களில் நடைபெறும் விற்பனையின் மூலம் கிடைக்கும் வருவாய். இந்த வருவாய் மொத்தமும் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்குச் செல்லும். அடுத்தது, ஐஜிஎஸ்டி என்பது மாநிலங்களுக்கு இடையேயான ஜிஎஸ்டி (Inter-State GST). இது, ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலங்களுக்கு இடையில் நடைபெறும் விற்பனையின் மூலம் வரும் கிடைக்கும் வருவாய். இந்த வருவாய் மத்திய, மற்றும் மாநில அரசுக்குப் பகிர்ந்து அளிக்கப்படும். இறுதியில் எந்த மாநிலத்தில் ஒரு பொருள் விற்பனை செய்யப்படுகிறதோ, அந்த மாநிலத்துக்கு வருவாய் பகிர்ந்து அளிக்கப்படும்.

உதாரணத்துக்கு, கர்நாடகாவில் உள்ள ஒரு வணிகர் சுமார் ரூ.10,000 மதிப்புள்ள பொருள்களை அதே மாநிலத்திலுள்ள ஒரு வாடிக்கையாளருக்கு விற்கிறார். இந்த விற்பனையில், சிஜிஎஸ்டி விகிதம் 9% மற்றும் எஸ்ஜிஎஸ்டி விகிதம் 9% இரண்டையும் உள்ளடக்கிய சரக்கு மற்றும் சேவை வரி 18% ஆகும். இந்த விற்பனையில் வணிகர் ரூ.1,800 வரியாகச் செலுத்துகிறார். இந்தத் தொகையானது கர்நாடகா அரசின் பங்கு ரூ.900 மற்றும் மத்திய அரசின் பங்கு ரூ.900.

இப்போது, கர்நாடகாவில் உள்ள ஒரு வணிகர் ஆந்திராவில் உள்ள ஒரு வணிகருக்குச் சுமார் ரூ.10,000 மதிப்புள்ள பொருள்களை விற்று உள்ளார். இந்த விற்பனையில், சிஜிஎஸ்டி விகிதம் 9% மற்றும் எஸ்ஜிஎஸ்டி விகிதம் 9% இரண்டையும் உள்ளடக்கிய சரக்கு மற்றும் சேவை வரி 18% ஆகும். இந்த விற்பனையில் வணிகர் ரூ.1,800யை ஐஜிஎஸ்டி வரியாகச் செலுத்துகிறார். இங்கு சிஜிஎஸ்டி மற்றும் எஸ்ஜிஎஸ்டி ஆகியவற்றைச் செலுத்த வேண்டி இருக்காது. இந்த வரி வருவாய் மத்திய மற்றும் மாநில அரசுக்குப் பகிர்ந்து அளிக்கப்படும். இங்கு ஆந்திராவில் உள்ள ஒரு வணிகருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு ஐஜிஎஸ்டி-ல் இருந்து ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் வருவாய் பகிர்ந்து அளிக்கப்படும்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About