பீச்சாங்கை - திரைவிமர்சனம்

தமிழ் சினிமாவில் தற்போது இளம் இயக்குனர்கள், புதிதாக சிந்தனை கொண்டவர்கள் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள். ஒரு சின்ன பட்ஜெட் படம், கதையின் மீ...

தமிழ் சினிமாவில் தற்போது இளம் இயக்குனர்கள், புதிதாக
சிந்தனை கொண்டவர்கள் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள். ஒரு சின்ன பட்ஜெட் படம், கதையின் மீது நம்பிக்கை என கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி போன்று பலர் கலக்கி வரும் நம்பிக்கையில், பீச்சாங்கை மூலம் களம் இறங்கியுள்ளார் இயக்குனர் அசோக். இவரும் நம்பிக்கையானவர்கள் லிஸ்டில் இணைந்தாரா பார்ப்போம்.

கதைக்களம்

கதாநாயகன் கார்த்திக் ஒரு பிக் பாக்கெட், தன் பீச்சாங்கையால் பல பர்ஸுகளை பிக் பாக்கெட் அடித்தாலும், பணத்தை தவிர மற்றதை அவர்கள் அட்ரஸுக்கே அனுப்பி வைக்கும் நல்ல பிக் பாக்கெட் என்று சொல்லலாம்.

அப்படி ஒரு கட்டத்தில் தன் நண்பர் அடித்து வந்த பணத்தை பங்கு பிரிக்கும் போது இது ஒரு முதியவர் தன் மகள் திருமணத்திற்கு வைத்திருந்த பணம் என தெரிய வர, அதை அந்த முதியவரிடமே ஒப்படைக்க செல்கின்றார்.

அங்கு ஹீரோயின் அஞ்சலி ராவ்வை பார்த்ததும் காதல் ஏற்பட பிறகு அவரும் காதலிக்க ஆடல், பாடல் என சந்தோஷமாக செல்ல, ஒரு நாள் இவர் பிக் பாக்கெட் என தெரிய வருகின்றது.

உடனே போலிஸில் இவரை காட்டிக்கொடுக்க, அந்த போலிஸிடமிருந்து அவர் தப்பி செல்லும் வழியில் ஒரு விபத்து ஏற்பட்டு இவரின் இடது கை பெருமூளைக்கு அப்பாற்பட்டு செயல்படுகிறது. பிறகு அந்த பீச்சாங்கையால் இவருக்கு ஏற்படும் நன்மை, தீமை என்ன என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

நாயகன் கார்த்திக் கொஞ்சம் விமல் போல் இருக்கின்றார், நடிப்பும் ஒரு சில இடங்களில் அவரை போலவே இருக்கின்றது. குறிப்பாக ரொமான்ஸ் காட்சிகள், நிறைய பயிற்சி வேண்டும். ஆனால், அதே நேரத்தில் அந்த பீச்சாங்கையால் அவர் செய்யும் சேட்டைகள், அவர் படும் அவதிகள் என பட்டையை கிளப்பியுள்ளார்.

பீச்சாங்கை தன் பேச்சை கேட்க மறுக்கின்றது, அதனால் ஏற்படும் விளைவு கான்செப்ட்(Concept) புதிது என்றாலும், காட்சியமைப்புகள் புதிதாக இல்லை. குறிப்பாக ஒரு குழந்தையை கடத்தும் கும்பலை காட்டுகிறார்கள், ஒரு முரட்டு வில்லன், அவருக்கு இரண்டு முட்டாள் அடியாட்கள் என பழைய பார்முலா.

அவர்களும் சிரிக்க வைக்கிறேன் என்று பலவற்றை முயற்சி செய்கிறார்கள். ஆனால் சிரிப்பு தான் வரவில்லை, டார்க் ஹியூமர் என்றாலும் கடைசி அரை மணி நேரம் கீழே விழுந்து அடிப்பட்டு அவர்கள் செய்யும் சேட்டைகளுக்கு சிரிப்பு வருவது கூட டார்க் ஹியூமருக்குள் எங்கும் வரவில்லை.

கௌதம் ராஜேந்திரனின் ஒளிப்பதிவில் சென்னையின் பல இடங்களை மிகவும் லைவ்வாக காட்டியுள்ளார். பாலமுரளி இசையில் பாடல்கள் பெரிதும் கவரவில்லை என்றாலும், பின்னணியில் கலக்கியுள்ளார்.

க்ளாப்ஸ்

கார்த்திக் பீச்சாங்கையால் படும் அவதி ரசிக்க வைக்கின்றது, பீச்சாங்கை என்ற கான்செப்ட் கவர்கின்றது.

கடைசி அரை மணி நேரம்.

பல்ப்ஸ்

பல இடங்களில் காமெடி ஒர்க்-அவுட் ஆகவில்லை, மிகவும் பழைய காலத்து திரைக்கதை.

எம்.எஸ்.பாஸ்கர் போன்ற அனுபவம் வாய்ந்த நடிகரை இன்னும் பயன்படுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில் பீச்சாங்கை கொஞ்சம் திரைக்கதையை புதுமை படுத்தியிருந்தால் கை கொடுத்திருக்கும்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About