நீங்கதாண்ணே வரணும், போகணும் - வடிவேலுவை ஆச்சர்யப்படுத்திய விஜய்

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடி நடிகர் வடிவேலு. இவரின் காமெடி இல்லாத தொலைக்காட்சி சேனல்களே இல்லை எனலாம். மிகபிசியாக இருந்த இவர் ...

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடி நடிகர் வடிவேலு. இவரின் காமெடி இல்லாத தொலைக்காட்சி சேனல்களே இல்லை எனலாம்.

மிகபிசியாக இருந்த இவர் நீண்ட நாட்களுக்கு பிறகு நடிக்க வந்து சரியான படம் அமையாமல் காத்திருக்கிறார். இவர் தற்போது மிகவும் நம்பியிருப்பது விஜய்61 தான்.

ப்ரண்ட்ஸ், சச்சின், போக்கிரி என வெற்றிகூட்டணியாக வலம் வந்த இவர்கள் கடைசியாக இணைந்து நடித்த படம் காவலன்.

விஜய்61 பற்றி வடிவேலு கூறுகையில், ‘விஜய், அட்லி ரெண்டு பேருமே நம்ம ரசிகருங்கண்ணே. நம்ம காமடியைச் சொல்லிதான் சிரிச்சுட்டிருப்பாங்க. ‘நீங்க விட்டுட்டுபோன இடம் அப்படியேதாண்ணே இருக்கு.

அதைத்தொட உங்களாலதாண்ணே முடியும். அதுல நீங்கதாண்ணே வரணும், போகணும்’னு இரண்டு பேரும் என் காமெடியைச் சொல்லி பாராட்டிக்கிட்டே இருப்பாங்க. அது பெரிய ஊக்கமா இருக்குண்ணே. கிட்டத்தட்ட ஒன்றரை மாசம் கால்ஷீட் கொடுத்திருந்தேண்ணே. ஒரு மாசம் முடிஞ்சுடுச்சு என்றார்.

விஜய் 61ல் ஆக்ஷனோடு வடிவேலு கூட்டணியில் ரசிகர்களுக்கு காமெடி விருந்தும் காத்திருக்கிறது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About