அதாகப்பட்டது மகாஜனங்களே - திரைவிமர்சனம்

தமிழ் சினிமாவில் தற்போதுள்ள நடிகர்களில் காமெடி, குணச்சித்திரம் இரண்டிலும் கலக்குபவர் தம்பி ராமையா. பல சோதனைகளை தாண்டி இன்று வெற்றியை அடைந்த...

தமிழ் சினிமாவில் தற்போதுள்ள நடிகர்களில் காமெடி, குணச்சித்திரம் இரண்டிலும் கலக்குபவர் தம்பி ராமையா. பல சோதனைகளை தாண்டி இன்று வெற்றியை அடைந்துள்ளார். அவரின் மகன் உமாபதி முதன் முறையாக கோலிவுட்டில் கால் வைத்துள்ள படம் தான் அதாகப்பட்டது மகாஜனங்களே, தம்பி ராமையாவை போல் உமாபதியும் வெற்றியை ருசித்தாரா? பார்ப்போம்.
கதைக்களம்

உமாபதி ஒரு கிட்டாரிஸ்ட், இவரின் கிட்டார் ஒரு சமத்தில் இவரிடமிருந்து வேறு சிலர் கைக்கு செல்கின்றது, உமாபதிக்கு தன் கிட்டார் தான் எல்லாமே.

அதனால், அந்த கிட்டாரை தேடி உமாபதி செல்ல, அந்த கிட்டார் மூலமாகவே அவருக்கு பல பிரச்சனைகள் சுற்றி வருகின்றது.

இறுதியில் அந்த கிட்டார் அவருக்கு கிடைத்ததா? இந்த பிரச்சனைகளில் இருந்து அவர் வெளிவந்தாரா? என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

உமாபதி 6 அடி உயரம், நல்ல கலர் என தென்னிந்தியாவின் ஹிரித்திக் ரோஷன் போல் காட்சியளிக்கின்றார், ஹீரோ மெட்டிரீயல் என்றாலும் வரும் நாட்களில் கதை தேர்வில் கொஞ்சம் கவனம் தேவை சார், முதல் படம் ஜாலியாக பண்ணலாம் என்று முடிவெடுத்துள்ளார் போல, நடனக்காட்சிகள் எல்லாம் சிறப்பாக செய்துள்ளார், கொஞ்சம் சிரமப்பட்டால் நல்ல இடம் காத்திருக்கின்றது.

உமாபதி கிட்டாரை தேடிச்செல்லும் இடம், அதனால், அவர் சந்திக்கும் பிரச்சனை என மிக ஜாலியாகவே திரைக்கதையை நகர்த்தி செல்ல முயற்சித்துள்ளனர். பெரிய திருப்பங்கள் ஏதுமில்லை.

இதற்கு கருணாகரன் மிகவும் உதவியுள்ளார், செம்ம பில்டப் செய்து அவர் உமாபதியிடம் தன்னை பற்றி சொல்லும் இடத்திலும், அதை தொடர்ந்து நடக்கும் காட்சியமைப்புகளும் சிரிப்பிற்கு கேரண்டி.

டி.இமானின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம், அதிலும் ஏனடி பாடல் சில காலம் எல்லோரின் ரிங்டோனாக இருக்கும், இருந்தாலும் அந்த 3 டியூனை விட்டு எப்போது வெளியே வருவார் என்று தெரியவில்லை.

க்ளாப்ஸ்

கருணாகரன் காமெடி பல இடங்களில் ஒர்க்-அவுட் ஆகியுள்ளது.

டி.இமானின் இசை.

பல்ப்ஸ்

கதையில் எங்குமே அழுத்தம் இல்லை, பெரிய திருப்பங்கள் ஏதுமில்லை.

மொத்தத்தில் அதாகப்பட்டது மகாஜனங்களே எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் சென்று பார்த்தால் கொஞ்சம் ரசிக்கலாம்.

மேலும் பல...

0 comments

Blog Archive