அனுபவம்
நிகழ்வுகள்
அப்பா பெயரை கெடுக்கிறாங்க! நாகேஷ் மகன் ஒப்பாரி!
June 30, 2017
தமிழ்சினிமாவில் அழியாப் புகழுக்கு சொந்தக்காரர் நாகேஷ். பொக்கிஷம் போல கொண்டாடப்பட வேண்டிய நாகேஷை கெட்ட நோக்கத்தோடு சிந்தித்துக் கூட பார்க்கப் போவதில்லை எவரும். நிஜம் அப்படியிருக்க, என் தந்தையின் பெயருக்கு களங்கம் விளைவிக்கப் போகிறார்கள் என்று ஒரு சினிமா கம்பெனி மீது கல் எறிந்திருக்கிறார் நாகேஷின் மகன் ஆனந்த்பாபு.
வேறொன்றுமில்லை… ‘நாகேஷ் திரையரங்கம்’ என்றொரு படம் உருவாகி வருகிறது. ஆரி, ஆஸ்னா சவேரி நடித்து வரும் இப்படத்தை இஷாக் என்பவர் இயக்கி வருகிறார். கடந்த பல மாதங்களாக இப்படத்தை பற்றிய செய்திகள் செய்தி தாள்களிலும் இணையதளங்களிலும் வெளியாகி வருகிறது. அப்போதெல்லாம் அதை கவனிக்கக் கூட நேரம் ஒதுக்காத ஆனந்தபாபு, படம் முடிந்து ரிலீசுக்கு தயாரான இந்த நேரத்தில் அப்படத்தை வெளியிட தடை விதிக்குமாறு நீதிமன்றத்தை நாடியிருக்கிறார். அதுமட்டுமல்ல… ‘என் அப்பா நாகேஷின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பது போல இப்படத்தின் தலைப்பு அமைந்துள்ளது’ என்று குற்றம் சாட்டியிருக்கும் அவர், நஷ்ட ஈடாக 50 லட்சம் கேட்டும் வழக்கு போட்டிருக்கிறார். (ஐம்பது லட்சம் கொடுத்தால் கெடுக்கப்பட்ட உங்க அப்பாவின் பெயர் சரியாகிடுமா சார்?) ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற தலைப்பு எப்படி அவரது பெயரை கெடுப்பதாக இருக்க முடியும்? யோசித்து யோசித்து பார்த்தாலும் ஒரு விடையும் தேறமாட்டேன் என்கிறதே?
சினிமாவில் இருந்து கொண்டே இப்படி சினிமாவுக்கு எதிராக சிந்திக்கும் இவரை அந்த நாகேஷின் ஆத்மா கூட மன்னிக்காது!

0 comments