சீரியலில் நடிக்கிறார் பாக்யராஜ்! ஜோடியாக நடிக்க மறுத்த ஹீரோயின்!

ஒருகாலத்தில் அடுக்கடுக்காக வெற்றிகளை மட்டுமே கொடுத்த கே.பாக்யராஜ், இன்றளவும் ‘திரைக்கதை மன்னன்’ என்றே பாராட்டப்படுகிறார். காலம் நல்ல நல்ல ம...

ஒருகாலத்தில் அடுக்கடுக்காக வெற்றிகளை மட்டுமே கொடுத்த கே.பாக்யராஜ், இன்றளவும் ‘திரைக்கதை மன்னன்’ என்றே பாராட்டப்படுகிறார். காலம் நல்ல நல்ல மாங்கனிகளை கூட, பஞ்சாமிர்தம் ஆக்கிவிடுவதுதான் கொடுமை. சினிமாவில் அவரது திரைக்கதைக்கு இப்போது மவுசு இல்லை. அவரது மகனுக்கும் நல்ல படங்களை தேர்வு செய்து நடிக்கும் பக்குவம் இல்லை. இருந்தாலும் பழகிய சினிமாவை விட்டுவிட்டு, பட்டுத்துணி விற்கவா போக முடியும்?

பெரிய திரையை விட்டுவிட்டு சின்னத்திரைக்குள் என்ட்ரி ஆகிறார் பாக்யராஜ். அவ்வப்போது சின்னத்திரை ஜட்ஜ் ஆக முகம் காட்டியவர், இப்போது சீரியல் ஒன்றில் நடிக்கப் போகிறார். எருது இளைச்சுதுன்னா, குருவி பொண்ணு கேட்குமாம்… அப்படிதான் இவரை சீரியலில் கமிட் பண்ணியவர்கள், உங்கள் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்ணு அனுப்பி வைங்க என்றார்களாம். வேறு வழியில்லை. அனுப்பி வைத்திருக்கிறார் கே.பாக்யராஜ்.

அதேபோல இந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக நடிக்க சம்மதித்த ஊர்வசியிடமும், உங்க லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வேணும். ஏன்னா நீங்க இப்ப எப்படி இருக்கீங்கன்னு நாங்க தெரிஞ்சுக்கணும் என்று கேட்கப்பட்டதாம். நான் எப்படியிருக்கேன்னு கூட தெரிஞ்சுக்காத உங்க சீரியல்ல நான் ஏன் நடிக்கணும். முடியாது என்று தில்லாக மறுத்துவிட்டார் அவர்.

ஐயய்யோ… அப்புறம்? சீரியல் மற்றும் அதை வெளியிடும் சேனலின் ஆதிக்கத்திற்குட்பட்டு புகைப்படத்தை அனுப்பி அந்த வாய்ப்பை தட்டிக் கொண்டு சென்றிருக்கிறார் சொல்வதெல்லாம் உண்மை புகழ் லட்சுமி ராமகிருஷ்ணன்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About