மொத்தத்தில் ரங்கூன் - சுற்றி வரலாம் - திரைவிமர்சனம்

மணிரத்தனத்தின் கடல் படம் மூலம் அறிமுகமானாலும் இன்னுமும் வெற்றியை ருசிக்காத கவுதம் கார்த்திக் படத்துக்கு படம் வித்தியாசம் காட்ட வேண்டும் என்...

மணிரத்தனத்தின் கடல் படம் மூலம் அறிமுகமானாலும் இன்னுமும் வெற்றியை ருசிக்காத கவுதம் கார்த்திக் படத்துக்கு படம் வித்தியாசம் காட்ட வேண்டும் என்ற முயற்சியோடு இன்று அவரது நடிப்பில் வெளிவந்துள்ள படம் ரங்கூன். தனது சிஷ்யன் ராஜ்குமார் பெரியசாமி இயக்குனராக அழகு பார்த்து படத்தை தயாரித்துள்ளார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ்.

கதை

பர்மாவை பிறப்பிடமாக கொண்டு சந்தோசமாக 8 வயது வரை காலம் தள்ளிய கவுதம் கார்த்திக், தனது குடும்பத்துடன் அப்பாவின் அழைப்பின் படி பிழைப்பிறகாக சென்னைக்கு வருகிறார். 1988 வருடம் பர்மாவிலேருந்து சென்னைக்கு பலதரப்பட்ட மக்கள் படையெடுத்தனர். சென்னை வந்தவுடனே அவருக்கு குமரன், சசி என்கிற நண்பர்கள் கிடைக்கின்றன.

ஒரு விபத்தில் எதிர்பாராத விதமாக தனது அப்பாவை சிறுவயதிலே இழக்கிறார் , அதன் பிறகு தனது நண்பர்கள் தான் வாழ்கை அம்மா தங்கையுடன் சந்தோசமாக வாழ்கிறார். ஒரு கட்டத்தில் பஜாரில் மிக பிரபலமான நகை வியாபாரியின் அறிமுகம் கிடைக்கிறது.

அவருக்கு அந்த ஏரியாவிலே பெரிய செல்வாக்கு உள்ள நபர், அவரிடம் வேலைக்கு செல்கிறார் கவுதம் கார்த்திக் மற்றும் அவரது நண்பர்களான குமரன் , சசி. கவுதம் கார்த்திக்கின் உழைப்பும் தந்திரமான புத்திசாலித்தனம் குணசீலனுக்கு மிகவும் பிடித்து விடுகிறது. இந்த நேரத்தில் தொழில் ரீதியாக குணசீலனை கொலைசெய்ய முயற்சிக்கின்றனர், அந்த நேரத்தில் கவுதம் கார்த்திக் அவரை காப்பற்றுகிறார்.

அதன் பிறகு கவுதம் கார்த்திக் மேல் மிகுந்த நம்பிக்கையில் தங்கம் கடத்தல் சம்பந்தமாக பல முக்கிய விஷயங்களை சொல்லி தருகிறார் குணசீலன் . ஒரு கட்டத்தில் நகைக்கடை வியாபாரி சங்க தேர்தலில் தான் தலைவராக வேண்டும் என்றால் இங்கு இருக்கும் 6 கோடி மதிப்புள்ள தங்க பிஸ்கட்களை ரங்கூன் நாட்டில் பணமாக மாற்ற வேண்டிய வேலையை குணசீலன் கவுதம் கார்த்திக்கிடம் தருகிறார்.

தங்க பிஸ்கட்டுகளை ஏந்திக்கொண்டு தனது நண்பர்களுடன் ரங்கூனுக்கு பறக்கிறார் கவுதம், பிஸ்கட்களை பணமாக மாற்றி எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருந்த தருணத்தில் 6 கோடி ரூபாய் பணம் தொலைந்து போகிறது. அதன் பின் தொலைந்த பணம் கிடைத்ததா? குணசீலன் தலைவர் ஆனாரா? என்று எதிர்பாராத சில திருப்பங்களுடன் நகர்கிறது ரங்கூன்

படத்தை பற்றிய அலசல்

இதுவரை நடித்ததிலே கவுதம் கார்த்திக்கு பெயர் சொல்லும் படமாக நிச்சயம் இந்த ரங்கூன் இருக்கும், அவர் பேசும் லோக்கல் வசன உச்சரிப்பும் , நம்பிக்கைக்காக அவர் செய்யும் யதார்த்தனமான நடிப்பும் சபாஷ் போடவைக்கிறார். நண்பர்களாக நடித்துள்ள குமரன் என்கிற லல்லு ஒரு யதார்த்தமான நண்பனாக வாழ்ந்துள்ளார் .

இதற்கு முன் கதை , திரைக்கதை வசனம் இயக்கம், 8தோட்டாக்கள் போன்ற படங்களில் நடித்திருந்தாலும் இந்த படம் நிச்சயம் அவருக்கு கைகொடுக்கும்.

அதே போல் சசியாக இதற்கு தானே ஆசைப்பட்டாய் டேனியல் கதாபாத்திரம் கதையின் முக்கிய திருப்பம் அவர் கையில் இருக்கிறது. அதனை நன்கு உணர்ந்து நடித்துள்ளார். வழக்கம் போல் கதாநாயகி சனாவிற்கு சொல்லுபடி கதாபாத்திரம் வலுவாக இல்லை. எதை வைத்து முருகதாஸ் சிம்ரன் போல் இருக்கிறார் என்று சொன்னார் தெரியவில்லை. அதே போல் குணசீலன் கதாபாத்திரம், நாடக நடிகர் ஸ்ரீ, போலீசாக நடித்துள்ள மணிவண்ணன் எல்லாருக்குமே எதோ ஒரு விதத்தில் படத்தின் முக்கிய புள்ளியாக கதை நகர்த்துகின்றனர்.

பலம் என்கிறது இருக்கப்பட்டவன் இல்லாதவனை கீழ மிதிச்சி தள்றது மட்டுமில்ல , அதையும் தாண்டி வருகிறான் பாரு அதிலே தான் இருக்கு என்கிற கருவுடன் பாசிட்டிவான முடிவோடு இயக்குனர் ராஜகுமாரன் பெரியசாமி கொடுத்துள்ளார்

கிளாப்ஸ்

இயக்குனர் ராஜ்குமாரின் கதையமைப்பும், ஒவ்வொரு விஷயத்துக்கும் அவர் செய்த ஆராய்ச்சி ஆழமாக திரையில் தெரிகிறது

நடிகர்களின் யதார்த்தனமான நடிப்பு ,

நேர்த்தியான ஒளிப்பதிவு

பல்பஸ்

திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக கொடுத்திருக்கலாம் என்று தோன்றிய விஷயம்

பாடல், பின்னணி இசை சொல்லும்படியில்லை

மொத்தத்தில் ரங்கூன் - சுற்றி வரலாம்

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About