அனுபவம்
சினிமா
திரைவிமர்சனம்
சத்ரியன் - திரைவிமர்சனம்
June 09, 2017
விக்ரம் பிரபு கண்டிப்பாக ஒரு ஹிட் கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கின்றார். அதனால், இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரனுடன் கைக்கோர்த்து சத்ரியனாக களம் இறங்கியுள்ளார். ஏற்கனவே டீசர், ட்ரைலர் என அனைத்தும் மிரட்ட, படமும் மிரட்டியதா? விக்ரம் பிரபு எதிர்ப்பார்த்த வெற்றி கிடைத்ததா? பார்ப்போம்.
கதைக்களம்
கத்தி எடுத்தவன் கத்தியால் தான் மரணம் அடைவான், அவன் அப்படி இடையிலேயே கத்தியை விட நினைத்தால் என்ன ஆவான்? இது தான் படத்தின் ஒன் லைன்.
திருச்சியில் ரவுடிசத்தில் கொடிக்கட்டி பறப்பவர் மஞ்சிமாவின் அப்பா சமுத்திரம். ஆரம்பக்காட்சியிலேயே அவரை ஒரு குரூப் கொல்ல, திருச்சி வேறு ஒருவர் கண்ட்ரோலுக்கு வருகின்றது.
ஆதரவு இல்லாமல் இருக்கும் மஞ்சிமாவை பலரும் ரோட்டில் கிண்டல் செய்ய, அவருக்கு துணையாக விக்ரம் பிரபு வர, இவர்களுக்குள் காதல் பற்றிக்கொள்கின்றது.
ஒரு கட்டத்தில் மஞ்சிமாவிற்காக இந்த அடிதடி, வெட்டுக்குத்து எதுவும் வேண்டாம் என விக்ரம் பிரபு ஒதுங்க, அதன் பின் அவரை சுற்றி நிற்கும் பிரச்சனையை எப்படி முறியடித்தார் என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
விக்ரம் பிரபு கும்கியில் எப்படி பார்த்தோமோ அப்படியே தான் உள்ளார். அதாவது அந்த படத்தில் எப்படி எப்போதும் ஒரே மாதிரி முகத்தை வைத்துக்கொள்வாரோ, அதேபோல் தான் இதிலும். திருச்சியே தன் கண்ட்ரோலுக்கு கொண்டு வரவேண்டும் என்று நினைக்கு விக்ரம் பிரபு எத்தனை துடிப்பாக இருக்க வேண்டும், படம் முழுவது மிகவும் மந்தமாகவே இருக்கின்றார்.
அவர் மட்டும் அப்படி என்றால் படமும் அப்படித்தான் உள்ளது. கேங்ஸ்டர் படம் என்றால் ஒரு விறுவிறுப்பு, பரபரப்பு என இருக்க வேண்டாமா?. ஒரு இடத்தில் கூட சுவாரசியம் இல்லை, மஞ்சிமா முடிந்த அளவிற்கு நல்ல நடிப்பை தந்துள்ளார். தன் அம்மாவிடம் ஒரு ரவுடியை பிடிக்கும் என்று கூறுவதில் கூட ஒரு தைரியம், கண்களின் ஒரு பயமில்லாமல் அவர் பேசுவது என அனைவரையும் கவர்கின்றார்.
ஆனால் கவின், ரியோ இதையெல்லாம் விட யோகிபாபு போன்ற சிறந்த நடிகர்களை கூட ஏதோ ஜுனியர் ஆர்டிஸ்ட் போல் டீல் செய்தது மிகவும் வருத்தம். படத்தின் கதை நன்றாக இருந்தாலும் திரைக்கதையில் எந்த ஒரு இடத்திலும் திருப்பமே இல்லை.
எந்த ஒரு காட்சியாக இருந்தாலும் சரி ஜவ்வு போல் இழுத்துக்கொண்டே போகின்றது. படத்தின் மிகப்பெரிய ஆறுதல் சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு, திருச்சியை மிக லைவ்வாக படம் பிடித்து காட்டியுள்ளார். அதேபோல் யுவனின் இசை நீண்ட நாட்களுக்கு பிறகு மிரட்டியுள்ளார், சமீப நாட்களில் யுவனின் இசையில் வந்த படங்களிலேயே பின்னணியில் இத்தனை வித்தியாசம் காட்டியது இந்த படத்தில் தான்.
க்ளாப்ஸ்
யுவனின் பின்னணி இசை, ஒளிப்பதிவு.
சொல்ல வந்த கருத்து.
பல்ப்ஸ்
இரண்டு பேர் சேர்ந்து இழுத்தால் மட்டுமே நகர்ந்து செல்லும் திரைக்கதை.
எந்த ஒரு இடத்திலும் அழுத்தமான காட்சிகளே இல்லை.
மொத்தத்தில் சத்ரியனாக இருந்தால் மட்டும் போதாது, கொஞ்சம் சானக்யனாகவும் இருக்க வேண்டும்

0 comments