நான் இப்போவே வீட்டுக்கு போயாகணும்..! ஜூலி முடிவெடுத்தது இதனால்தான்

பிக் பாஸ் வீட்டில் உள்ள நடிகர்கள் பலர் ஜூலியை ஓரம்கட்ட நினைத்து அவரை தினமும் சீண்டுவது வடிக்கையாகிவிட்டது. இன்று ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் ஷ...

பிக் பாஸ் வீட்டில் உள்ள நடிகர்கள் பலர் ஜூலியை ஓரம்கட்ட நினைத்து அவரை தினமும் சீண்டுவது வடிக்கையாகிவிட்டது. இன்று ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் ஷோவில் ஜூலி மற்றும் ஆர்த்தி இடையே பெரிய சண்டை அரங்கேறியது.

என்ன பிரச்சனை என தலைவியாக இருக்கும் காயத்ரி ரகுராம் கேட்க, "எனக்கு ஆர்த்தி அக்கா மீது தான் கோபம். அவர் தான் என்னை அடிக்கடி நர்ஸ் என சொல்லி கிண்டல் செய்கிறார்" என ஜூலி சொன்னார்.

அதனால் கோபமான ஆர்த்தி கத்த ஆரம்பித்து விட்டார். தலைவியாக இருக்கும் காயத்ரியும் அவரோடு சேர்ந்து ஜூலியை திட்ட ஆரம்பித்துவிட்டார். "வாயை திறந்தாலே பொய்" என அவர் சொல்ல, ஜூலி அங்கிருந்து வெளியேறிவிட்டார்.

பின் கேமராவை பார்த்து "நான் இப்போவே வீட்டுக்கு போயாகணும்.. நான் பேக் செய்ய போறேன்" என கூறினார். அதனால் அங்கிருந்த ஓவியா, கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்டோர் அவரை சமாதானம் செய்தனர்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About