பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்கணும்; நடிகை காயத்ரி மீது நடவடிக்கை கோரி போலீஸில் புகார்!

பிரபல தனியார் தொலைக்காட்சி விஜய் டிவியில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் மூலம் நடத்தப்பட்டுவருகிறது. இந்நிகழ்ச்சி பொதுமக்களிடம...

பிரபல தனியார் தொலைக்காட்சி விஜய் டிவியில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் மூலம் நடத்தப்பட்டுவருகிறது. இந்நிகழ்ச்சி பொதுமக்களிடமும் நெட்டிசன்களிடமும் பெரும் எதிர்ப்பையும் வரவேற்பையும் பெற்றுவருகிறது.

இந்நிலையில் நடிகை காயத்ரி ரகுராம் சர்ச்சைக்குரிய கருத்தைக் குறிப்பிட்ட சமூகங்களுக்கு எதிராகவும் , மீனவர்களுக்கு எதிராகவும் பேசியதாக இணையதளங்களில் அவருக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, காயத்ரி ரகுராம் மீது நடவடிக்கை எடுக்கவும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கவும் கோரி திராவிட விடுதலை கழகத்தின் சார்பாக மதுரை மாவட்டச் செயலாளர் மணி அமுதன் மதுரை கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

அந்த மனுவில், விஜய் டி.வி-யில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் காயத்ரி ரகுராம், "சேரி பிஹேவியர்ஸ்" எனத் திட்டியுள்ளார். இது தலித் மக்களைக் கொச்சைப்படுத்தும் மற்றும் ஜாதிக் கலவரங்களைத் தூண்டும் விதமாக உள்ளது. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மதுரை புதிய போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் இன்றுதான் பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About