அவங்க ஏற்கனவே ஜெயில்ல தானே இருக்காங்க! கமலுக்கு பிரபல நடிகை ஆதரவு

பிக் பாஸ் நிகழ்ச்சி கலாச்சார சீரழிவு ஏற்படுத்துவதாக கூறி ஒரு அரசியல் கட்சி போலீசில் புகார் அளித்துள்ளது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்...

பிக் பாஸ் நிகழ்ச்சி கலாச்சார சீரழிவு ஏற்படுத்துவதாக கூறி ஒரு அரசியல் கட்சி போலீசில் புகார் அளித்துள்ளது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் மற்றும் ஆபாசமாக பேசும், நடிக்கும் போட்டியாளர்களையும் கைது செய்ய வேண்டும் என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கைதாவது பற்றி எனக்கு கவலையில்லை என கமல் தெரிவித்துள்ள நிலையில், நடிகை கஸ்தூரி கமலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதை அவர்கள் விளம்பரத்திற்காக செய்கிறார்கள் என கூறியுள்ள அவர், "பிக்பாஸ் போட்டியாளர்கள் ஏற்கனவே 100 நாள் வீட்டு காவலில் தான் உள்ளனர், அவர்களை ஏன் கைது செய்யவேண்டும்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.

"முதல்ல கலாச்சார தீவிரவாதிகளிடமிருந்து தமிழ் கலாச்சாரத்தை காப்பாத்தணும். இந்து மதம் ஒண்ணும் உங்க தனிப்பட்ட சொத்து இல்லை, வேலி போட்டு காக்க," என கஸ்தூரி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About