அமேசான் அடுத்த அதிரடி: உணவு வர்த்தகத்திலும் கால் பதிக்கிறது!

இந்தியாவில் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமாக இருக்கும் அமேசான், தனது வர்த்தகத்தை இன்னும் பலமாக விரிவுபடுத்த சில்லரை உணவு வர்த்தகத்தில் கால் பதிக...

இந்தியாவில் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமாக இருக்கும் அமேசான், தனது வர்த்தகத்தை இன்னும் பலமாக விரிவுபடுத்த சில்லரை உணவு வர்த்தகத்தில் கால் பதிக்கவுள்ளது.

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், உலகின் பல நாடுகளிலும் தன் வர்த்தகத்தைப் பலப்படுத்திவருகிறது. குறிப்பாக, இந்தியாவைச் சேர்ந்த பிளிப் கார்ட், ஸ்நாப்டீல் ஆகிய நிறுவனங்களுக்கு அமேசான் கடும் சவாலாக இருக்கிறது. தற்போது இந்நிறுவனம் உணவு வர்த்தகத்திலும் கால் பதிக்கவுள்ளது.

இதற்காக அமேசான் நிறுவனம் 500 மில்லியன் டாலருக்கான உணவுப்பொருள் விற்பனை அனுமதியை மத்திய அரசிடமிருந்து பெற்றுள்ளது. இதுவரையில் அமேசான் நிறுவனம், பிக் பஜார், ஸ்டார் பஜார் போன்ற விற்பனையாளர்களுடன் இணைந்து உணவுப்பொருள்கள் விற்பனையை மேற்கொண்டு வந்தது. தற்போது மத்திய அரசின் அனுமதி கிடைத்ததன் மூலம் அமேசான் நிறுவனமே உணவு மற்றும் மளிகைப் பொருள்களை இருப்பு வைத்து சேமித்து ஆன்லைன் முறையில் விற்பனை செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறு, குறு வணிகர்கள் பாதிக்கப்படுவர் என்ற கூற்றும் நிலவி வருகிறது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About