விரைவில் வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்பலாம்!

ஒருவருக்கு பணம் அனுப்ப வேண்டுமென்றால், வங்கிக்குச் சென்றதெல்லாம் அந்தக்காலம். நெட் பேங்க்கிங், மொபைல் பேங்க்கிங் போன்றவை அறிமுகமானபின், இரு...

ஒருவருக்கு பணம் அனுப்ப வேண்டுமென்றால், வங்கிக்குச் சென்றதெல்லாம் அந்தக்காலம். நெட் பேங்க்கிங், மொபைல் பேங்க்கிங் போன்றவை அறிமுகமானபின், இருக்கும் இடத்தில் இருந்தபடியே பணம் அனுப்புவது மிகவும் எளிதாகிவிட்டது. இந்நிலையில், இந்தியாவில் அதிகமானோர் பயன்படுத்தும் வாட்ஸ்அப் மூலமும் பணம் அனுப்பும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

வாட்ஸ்அப் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான பிரையன் ஆக்டன் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது, வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்பும் வசதியைக் கொண்டுவருவது தொடர்பாக, மத்திய தகவல் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தைச் சந்தித்துப்பேசினார். UPI (Unified Payments Interface) எனப்படும் ஒரே இடத்தில் பணம் செலுத்தும் வகையில் அந்நிறுவனம் தனது அப்ளிகேஷனில் மாறுதலைக் கொண்டுவர உள்ளது. நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (National Payments Corporation of India) இதற்கான ஒப்புதலை தற்போது வழங்கியுள்ளது.

பணம் பெறுபவரின் வங்கிக்கணக்கோடு பதிவுசெய்த மொபைல் எண் இருந்தாலே, அவருக்கு பணம் அனுப்பும் வகையில் தனது UPI-யை அந்நிறுவனம் வடிவமைக்க உள்ளது. எனவே, வாட்ஸ்அப் மூலமாகவே பணம் அனுப்பும் வசதி விரைவில் அறிமுகமாகலாம்.

மேலும் பல...

1 comments

Blog Archive