சீன எல்லையில் கூடாரம் அமைத்தது இந்திய ராணுவம்!

சிக்கிம் மாநில எல்லையில், இந்தியா-சீனா-பூட்டான் நாடுகளின் எல்லைகள் ஒன்று சேரும் டோக்லாம் பகுதியை ஆக்கிரமித்த சீனா, சாலை அமைக்கும் பணியை ஆரம...

சிக்கிம் மாநில எல்லையில், இந்தியா-சீனா-பூட்டான் நாடுகளின் எல்லைகள் ஒன்று சேரும் டோக்லாம் பகுதியை ஆக்கிரமித்த சீனா, சாலை அமைக்கும் பணியை ஆரம்பித்தது. சீனா தொடங்கிய பணிகளை, இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த சீனா, இந்தியா அமைத்திருந்த இரண்டு பதுங்குகுழிகளை அழித்தது. சீனாவின் இந்தச் செயலைக் கண்டித்த இந்தியா, எல்லையில் 3,000 வீரர்களைக் குவித்தது.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த சீனா, இந்திய ராணுவத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறும், இல்லையேல் ராணுவ நடவடிக்கை எடுப்போம் எனவும் எச்சரித்துள்ளது. இதனால், இந்தியாவின் வடகிழக்கு எல்லையில் போர்ப் பதற்றம் தொடர்ந்து நீடித்துவருகிறது. இந்நிலையில், டோக்லாம் பகுதியில் இந்திய ராணுவம் கூடாரம் அமைத்துத் தங்கியுள்ளது.

அவர்களுக்கு, உணவு உள்ளிட்ட பொருள்கள் கூடாரத்திலேயே வழங்கப்படுகின்றன. இதனால், அங்கு நீண்ட நாள்கள் தங்கியிருக்க இந்திய ராணுவம் முடிவுசெய்திருப்பதாகத் தெரிகிறது. இந்தியப் படைகளைத் திரும்பப் பெறுமாறு சீன ராணுவம் கூறிவரும் நிலையில், அங்கு இந்திய ராணுவம் கூடாரம் அமைத்துள்ளது பரபரப்பைக் கூட்டியுள்ளது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About