அரசாங்கத்துடன் மோதக் கிளம்பிய பாலா!

தம்மடித்துப் பழகிய நபர்களிடம் சென்று, ‘புகை நமக்கு பகை’ என்றெல்லாம் ரைமிங்காக அட்வைஸ் பண்ணினாலும், “ஒரு தம்மடிச்சுட்டு வந்து கேட்கட்டுமா?” ...

தம்மடித்துப் பழகிய நபர்களிடம் சென்று, ‘புகை நமக்கு பகை’ என்றெல்லாம் ரைமிங்காக அட்வைஸ் பண்ணினாலும், “ஒரு தம்மடிச்சுட்டு வந்து கேட்கட்டுமா?” என்பார்கள் துளி கூட கூச்சப்படாமல். இப்படி, தானே நழுவி குடத்துக்குள் விழுந்த குட்டி டம்ளர்கள் பல இன்னும் அந்த பழக்கத்திலிருந்து விடுபட முடியாமல் தவித்து வருகிற சம்பவங்கள் 100 க்கு 101 சதவீதம் உண்மை.

இந்த ஒரு இக்கட்டான சுச்சுவேஷனில் சுமார் 100 பேர் ஒரு மாதம் புகை பிடிக்காமல் பிடிவாதமாக இருந்து காட்டியதை மேடை போட்டு பாராட்டாமல் விட்டால், அவர்களின் சபதம் சறுக்கிவிடும் அல்லவா? அப்படியொரு நிகழ்வுக்கு வந்திருந்து அவர்களை வாழ்த்தினார் இயக்குனர் பாலா.

அப்படியே சும்மா போய்விட்டால், பாலா என்ற சூறாவளி வந்ததை உலகம் எப்படி நம்பும்? விட்டு வெளுத்துவிட்டு போனார் அரசாங்கத்தை. “புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்று புகைப்பிடிக்கிற காட்சிகள் வந்தால் எச்சரிக்கை போடச் சொல்லி வற்புறுத்துகிறது அரசாங்கம். புகைப்பிடிப்பது தீங்கு விளைவிக்கும் என்று நாடெங்கும் பிரச்சாரம் செய்கிறது அதே அரசாங்கம். ஆனால் தெருவுக்கு தெரு கடை திறந்து வச்சு விற்கிறதே நீங்கதானே? நீங்க மூடி வச்சா நாங்க ஏன் குடிக்கிறோம். முதல்ல உற்பத்தியை தடை பண்ணு. விற்கறதை தடை பண்ணு. அதைவிட்டுட்டு புகைபிடிக்காதே என்று அட்வைஸ் பண்ணுறதை ஏத்துக்க முடியாது” என்றார் கடும் கோபத்துடன்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About