என்றுமே இளமையாக இருக்க ஆண்கள் இதைச் செய்யலாம்!

ஓயாத உழைப்பு, உடல் நலத்தில் அக்கறை இல்லாத விளைவால் ஆண்கள் சீக்கிரமே முதுமை அடைகிறார்கள். சிலர் மட்டும் எப்போதும் மார்க்கண்டேயனைப்போல என்றும...

ஓயாத உழைப்பு, உடல் நலத்தில் அக்கறை இல்லாத விளைவால் ஆண்கள் சீக்கிரமே முதுமை அடைகிறார்கள். சிலர் மட்டும் எப்போதும் மார்க்கண்டேயனைப்போல என்றும் இளமையாக இருப்பார்கள். அதன் ரகசியம் என்னவென்றால் உடல்வாகு அப்படி என்று சிரிப்பார்கள். ஆழ்ந்து கவனித்ததில் இவை எல்லாம் இருக்கலாம் என வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இதைப் பின்பற்றி நீங்களும் என்றும் இளமையாக இருக்கலாமே?

1.தினமும் 10 டம்ளர் அல்லது 2 லிட்டர் தண்ணீர்  குடியுங்கள். 2.இரண்டு வேளை குளியல் 4 வேளை முகம் கழுவ வேண்டும். 3. பசலைக்கீரை, பீன்ஸ் சேருங்கள் முகச்சுருக்கங்கள் வராது. 4.மாதுளை, திராட்சை ஜூஸ் குடியுங்கள். 5.பால், பயத்தம்பரும்பு கொண்டு முகம் கழுவுங்கள். 6.உடற்பயிற்சி உடலில் தளர்வை உண்டாக்காது. 7. மிகச்சரியான அளவு உடைகளை அணியுங்கள். 8.வெயிலில் சுத்த வேண்டாம். அப்படிச் சுற்றினால் சன் ஸ்க்ரீன் லோஷன் போடவும். 9. அளவான உணவை இடைவெளி விட்டு உண்ணவும். 10. வெதுவெதுப்பான நீரில் ஷேவ் செய்யவும். 11.உணவில் உள்ள கருவேப்பிலையை மென்று தின்னவும்.

12.அதிக நேரம் பல் துலக்கி பல்லை கெடுக்க வேண்டாம். 13. புகைப்பழக்கம் முகச்சுருக்கம் தரும். 14.குடிப்பழக்கம் வேண்டவே வேண்டாம். 15. அதிக நேரம் கண்விழிக்க வேண்டாம். 16.தலையில் அழுக்கில்லாமல் இருந்தாலே முடி உதிர்வது நிற்கும். 17.மசாஜ் செய்து கொள்ளுங்கள் தசைகள் பொலிவாகும். 18. மூன்று மாதம் ஒருமுறை சரும மருத்துவரை ஆலோசியுங்கள். 19. எண்ணெய் உணவுகள் வேண்டாம். 20. முகத்தைக் காய விட வேண்டாம். 21.நல்ல ஓய்வும் உறக்கமும் தேவை. 22.மீசை, தாடிகளை அழகாக வைத்துக்கொள்ளுங்கள். 23.சோப்பு, ஷேம்பு, கிரீம்களில் கவனம் செலுத்துங்கள், இயற்கை மூலிகையாக தேர்வு செய்யுங்கள். 24.அடிக்கடி வாய்விட்டுச் சிரியுங்கள்.

மேற்சொன்னவைகளை கடைபிடித்தால் கட்டாயம் நீங்கள் ஐம்பதிலும் ஜொலிஜொலிக்கலாம்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About