அனுபவம்
நிகழ்வுகள்
வடிவேலு விவகாரம்! கண்டு கொள்ளாமல் இருக்கிறாரா விஷால்?
November 16, 2017
சுமார் 3 கோடி அட்வான்ஸ் வாங்கிக் கொண்ட வடிவேலு, ஒப்புக் கொண்டபடி இம்சை அரசன் 24 ம் புலிகேசி படத்தில் நடிக்காமல் டிமிக்கிக் கொடுப்பதை நாம் ஏற்கனவே எழுதியிருந்தோம். வடிவேலுவும் வேணாம்… அவரது வானளாவிய நடிப்பும் வேணாம்… கொடுத்த அட்வான்சை திருப்பி வாங்கிக் கொடுத்தா போதும் என்கிற குறைந்தபட்ச குமுறலுடன் தயாரிப்பாளர் சங்கத்தை நாடியிருக்கிறார் டைரக்டர் ஷங்கர். அங்குதான் அவருக்கு முட்டு சந்தில் சிக்கிய மூச்சு முட்டல். ஏன்?
“நடிகர்கள் மீதான எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதில் நான் தலையிட முடியாது. நீங்களே பார்த்துக்கோங்க” என்று சங்கத்தின் செயலாளர்களான ஞானவேல்ராஜா, மற்றும் கதிரேசனிடம் பிரச்சனையை தள்ளிவிடுகிறாராம் விஷால்.
குற்றம் இழைத்தவர் யாராக இருந்தாலும் விட மாட்டேன் என்று முழங்குவதுதானே ஒரு தலைவனுக்கு அழகு? அப்படியிருக்க ஏன் விஷால் இப்படி நடந்து கொள்ள வேண்டும்? இந்த வருத்தம் ஷங்கருக்கு இருந்தாலும், பிரச்சனை தீர்ந்தால் சரி என்கிற முடிவுக்கு வந்திருக்கிறாராம். இந்த பிரச்சனை இப்போது ஞானவேல்ராஜா முன்னிலையில் வந்திருப்பதால் ஏதேனும் திருப்பம் நிகழலாம் என்றும் வெயிட்டிங்கில் இருக்கிறது புலிகேசி வட்டாரம்.
ஆக கடைசியில் சிம்புதேவன் என்கிற இயக்குனரின் வாழ்க்கையில் ரம்மி விளையாடிவிட்டார் வடிவேலு!

0 comments