பாகுபலி 2 பட இடத்தை பிடித்த ரஜினியின் 2.0- சூப்பர் ஸ்பெஷல்

அதிக பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகி வரும் 3D படம் ரஜினியின் 2.0. இந்த படம் ஆரம்பித்த நாளில் இருந்தே ரசிகர்களிடம் பெரிய எதிர்...

அதிக பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகி வரும் 3D படம் ரஜினியின் 2.0. இந்த படம் ஆரம்பித்த நாளில் இருந்தே ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கிறது.

அதேபோல் துபாயில் நடந்த இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட் சினிமாவும் எப்படி வரவேற்றது என்பது நமக்கு நன்றாகவே தெரியும்.

படத்தில் VFX வேலைகள் நிறைய இருப்பதால் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனம் லைகா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் என்று உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதற்கு நடுவில் படம் ஏப்ரல் 27ம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வருடம் ஏப்ரல் 28ம் தேதி பாகுபலி 2 ரிலீஸாகி மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது. அடுத்த வருடம் அதே நாளில் 2.0 ரிலீஸ் ஆவதால் எப்படிபட்ட வசூல் சாதனை நடக்கப்போகிறது என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About