அரசியலுக்கு வரும் ரஜினி கமல்! சத்யராஜ் செம நக்கல்!

அமைதிப்படை மாதிரியான அதிரடி அரசியல் படங்களில் நடித்தவர்தான் சத்யராஜ். அவருக்கே சில ஹீரோக்களின் அரசியல் என்ட்ரி ஐயே என்று இருக்கிறது போலும்....

அமைதிப்படை மாதிரியான அதிரடி அரசியல் படங்களில் நடித்தவர்தான் சத்யராஜ். அவருக்கே சில ஹீரோக்களின் அரசியல் என்ட்ரி ஐயே என்று இருக்கிறது போலும். சிபிராஜ் நடிக்கும் சத்யா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இப்படத்தின் முதலீட்டாளர் (வார்த்தை உபயம் சத்யராஜேதான்) என்ற முறையில் இவரும் கலந்து கொண்டார்.

ரம்யா நம்பீசன், ஆனந்தராஜ், படத்தின் இசையமைப்பாளர் சைமன் கே கிங் ஆகியோர் பேசி முடித்ததும் மைக்கை தொட்டார் சத்யராஜ். ‘இங்கு சிபிராஜ் நல்லா பேசினார். ஆர்.கே.நகர்ல போய் பேசுற அளவுக்கு கூட அவருக்கு திறமை வந்திருச்சோன்னு நினைச்சேன். ஆனால் அரசியல் ஆசையெல்லாம் இப்ப வேணாம். அதுக்கெல்லாம் வயசாகியிருக்கணும்…’ என்று கூறிவிட்டு உதட்டை கடித்துக் கொண்டவர், ‘நான் வேற… என்னென்னவோ பேசிகிட்டு’ என்றார் புன்னகை வழிய. அவர் ரஜினியையும் கமலையும்தான் கிண்டல் செய்கிறார் என்பதை புரிந்து கொண்டு சிரித்தது கூட்டம். சினிமாவிலிருந்து ஓய்வு பெற்றபின் ஒரே போக்கிடம் அரசியல்தான் என்பதை போல சத்யராஜ் பேசியது நகைச்சுவை என்றாலும் நிஜமும் அதுதானே?

தெலுங்கில் வெளிவந்து ஹிட்டடித்த ஷனம் படத்தைதான் சத்யா என்ற தலைப்பில் ரீமேக் செய்திருக்கிறார்கள். படத்தின் ரீமேக் ரைட்ஸ் வாங்குவதற்கு முன் பாகுபலி படப்பிடிப்பில் இருந்தாராம் சத்யராஜ். படத்தின் ஹீரோ பிரபாஸ்சிடம் இந்த விஷயத்தை தெரிவிக்க, அவர்தான் ஷனம் படத்தை நம்பி வாங்குங்க என்றாராம் சத்யராஜிடம்.

விஜய் ஆன்டனியின் சிபாரிசின் பேரில் சைத்தான் பட இயக்குனர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தியை இயக்க வைத்திருக்கிறார் சிபிராஜ்.

இவருக்கு ஜோடி ரம்யா நம்பீசன். பேசும்போது, மிகவும் ஒழுக்கமான நேர்மையான சத்யா படத்தின் டீமுடன் பணியாற்றியது எனக்கு மகிழ்ச்சி என்றார். இந்த வார்த்தைகளில் அடங்கிய பாராட்டுகள் ஓகே. ஒழுக்கமான நேர்மையான என்று சொன்னீங்களே… அப்படின்னா நீங்க நடிச்ச முந்தைய படங்கள்ல?

டவுட்டை கிளம்பிட்டீங்களே தாயீ?

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About