வெத்துவேட்டு நகுலின் குத்துப்பாட்டில் எம்.ஜி.ஆர்! அடுக்குமா இது?

எம்.ஜி.ஆர் காலத்தில் குத்துப்பாட்டு இல்லைதான். (ஆடலுடன் பாடலைக் கேட்டு… பாடல் ஃபார்ஸ்ட் பீட். ஆனால் குத்துப்பாட்டு இல்லை) அப்படியே இருந்தால...

எம்.ஜி.ஆர் காலத்தில் குத்துப்பாட்டு இல்லைதான். (ஆடலுடன் பாடலைக் கேட்டு… பாடல் ஃபார்ஸ்ட் பீட். ஆனால் குத்துப்பாட்டு இல்லை) அப்படியே இருந்தாலும் எம்.ஜி.ஆர் அதில் ஆடியிருப்பாரா என்பதும் டவுட். அப்படியிருக்க, நகுல் நடிக்கும் ‘செய்’ என்ற படத்தில் இடம்பெற்றிருக்கும் ஒரு குத்துப்பாடலில் எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு ஷாக் காத்திருக்கிறது.

மலையாளத்தில் முன்னணி ஹீரோக்களை வைத்து ஐந்து படங்களை இயக்கியிருக்கும் ராஜ்பாபு என்பவர்தான் இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஒரு பாடல் காட்சியில் நகுல் எம்.ஜி.ஆர் போல தொப்பி, வேஷ்டி, கண்களில் கூலிங் கிளாஸ் அணிந்தபடி குத்துப்பாட்டுக்கு ஆடுகிறார். ஒரு முழு பாடலில் சிறிதளவே வரும் இந்த காட்சி ரசிகர்களை கவலைப்பட வைக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

ஆனால் இது குறித்தெல்லாம் நகுல் கவலைப்பட்டதாக தெரியவில்லை. இந்தப்படத்தின் பிரஸ்மீட்டில் பேசிய நகுல், இந்த எம்ஜிஆர் வேஷம் குறித்த எந்த விபரங்களையும் பதிவு செய்யாமல் கவனமாக இருந்தார்.

சரவெடி சரவணன் என்ற சாதாரண இளைஞன் எப்படி சினிமா நட்சத்திரம் ஆகிறான் என்பதுதான் கதையாம். நீங்க நடிகனாகுங்க…. சூப்பர் ஸ்டாரா கூட ஆகுங்க…. எதுக்கு எம்ஜிஆரை அவமானப்படுத்தணும்?

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About