'2.0' புகைப்படங்கள் இணையத்தில் கசிந்தது: படக்குழு அதிர்ச்சி

 '2.0' திரைப்படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்ததால் படக்குழு அதிர்ச்சியில் உறைந்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய...

 '2.0' திரைப்படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்ததால் படக்குழு அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் கடந்த 2010-ல் எந்திரன் திரைப்படம் வெளியானது. இதன் 2-வது பாகமாக '2.0' என்ற படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கி வருகிறார். லைக்கா தயாரிப்பில் உருவாகி வரும் இத்திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மற்றும் ஜப்பான், கொரியா உள்பட 15 மொழியில் திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். சுமார் ரூ.400 கோடி பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

சென்னை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. கிராபிக்ஸ் காட்சிகளின் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. ரஜினி - ஏமி ஜாக்சன் - அக்‌ஷய்குமார் மூவரும் பங்குபெறும் பிரதான சண்டைக்காட்சி ஒன்றையும் படக்குழு படமாக்கியுள்ளது. சண்டைக்காட்சி படப்பிடிப்பு முடிவடைந்ததைத் தொடர்ந்து, பிரதான காட்சிகளின் அனைத்தும் முடிந்துவிட்டதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் 2.0 திரைப்படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்தது. அப்படங்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரப்பப்பட்டு வருவதால் படக்குழு அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

படப்பிடிப்பு தளத்துக்குள் யாருக்குமே அனுமதி கிடையாது, பெரும் கெடுபிடிகளைத் தாண்டி இணையத்தில், வாட்ஸ் அப்பில் எப்படி புகைப்படங்கள் வெளியானது என்பது தெரியாமல் 2.0 படக்குழு பெரும் அதிர்ச்சியில் இருக்கிறது. எப்படி புகைப்படங்கள் வெளியானது என்பது குறித்தும் படக்குழு தீவிரமாக யோசித்து வருகிறது. 

மேலும் பல...

0 comments

Blog Archive