சொல்லிவிடவா திரைவிமர்சனம் - இன்னும் பிளான் செய்து பக்காவாக சொல்லியிருக்கலாம் அர்ஜுன் சார்.

படங்கள் பல தியேட்டர்களில் வந்து குவிகிறது. இந்த வாரம் வந்துள்ள மூன்று படங்களில் ஒன்று சொல்லிவிடவா. அர்ஜூன் இயக்கத்தில் வெளியான இப்படம் என்...


படங்கள் பல தியேட்டர்களில் வந்து குவிகிறது. இந்த வாரம் வந்துள்ள மூன்று படங்களில் ஒன்று சொல்லிவிடவா. அர்ஜூன் இயக்கத்தில் வெளியான இப்படம் என்ன சொல்ல விரும்புகிறது என பார்க்கலாம்.

கதைக்களம்

படத்தின் ஹீரோ சந்தன் குமார் தமிழுக்கு புதுமுகம். இதில் இவரின் பெயர் சஞ்சய். பெரிய தொழிலதிபராக இருக்கும் இவர் விமானத்திற்காக காத்திருக்கிறார். அப்போது திடீரென பழைய நினைவுகள் அவருக்கு வருகிறது.

இவரின் அப்பாவாக மொட்டை ராஜேந்திரன். நண்பர்களாக பிளாக் பாண்டி மற்றும் சதீஷ். ஆரம்பத்தில் பத்திரிக்கை துறையில் இருக்கும் இவர் ஒரு கொலை தொடர்பான உண்மை சம்பவத்தை அம்பலமாக்கி பாராட்டை பெறுகிறார்.

இதே போல ஹீரோயின் ஐஸ்வர்யா (மது) ஒரு ஊடகத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இவருக்கு அப்பா, அம்மா இல்லை. சுஹாசினியின் பார்வையிலும், தாத்தாவின் வளர்ப்பிலும் இருக்கிறார். இவருக்கு தோழர்களாக போண்டா மணி மற்றும் யோகி பாபு.

சஞ்சய், மது ஒரு சின்ன விபத்தால் சந்திக்கிறார்கள். இருவருக்கும் தங்கள் வேலை சார்பாக கார்கில் செல்ல வேண்டிய சூழ்நிலை வருகிறது. இருவரும் தங்கள் நண்பர்களோடு வழிப்பயணத்தை தொடர ஹீரோ, ஹீரோயின் இருவரும் மீண்டும் இங்கே சந்திக்கிறார்கள்.

ஆனால் எங்கே செல்கிறோம் என விசயம் தெரிந்ததும் இருவரது நண்பர்களும் ஒரு விலகிச்செல்கிறார்கள். பின் தனியாக சஞ்சய், மது தங்கள் பயணத்தை தொடர்கிறார்கள்.

கார்கில் பகுதியில் ராணுவத்துறையில் நடக்கும் விசயங்களை பதிவு செய்கிறார்கள். நடந்து போகும் சில விசயங்கள் சொல்லாத காதல் ஒருபக்கம் இருவரின் மனதுக்குள்ளும். இந்நிலையில் ஒரு பெரும் ஆபத்து வர இருவரும் என்ன ஆனார்கள், காதலை சொன்னார்களா என்பது தான் கதை.

படத்தை பற்றிய அலசல்

படத்தின் ஹீரோ சந்தனுக்கு நல்ல தோற்றம். நடிப்பும், நடனமும் ஓகே ரகம் தான். ஆரம்பத்திலேயே சண்டை காட்சிகள். நல்ல முயற்சி. ஆனாலும் சில லாஜிக்கை மீறிய சண்டைகள்.

இருந்தாலும் ஹீரோ தமிழ் படத்துக்கு செட்டாவார் என்று சொல்கிறது. முன்பே கன்னடப்படங்களில் நடித்துள்ளார். அந்த அனுபவம் இப்போது அவருக்கு கைகொடுத்திருக்கிறது.

ஹீரோயின் ஐஸ்வர்யா, நடிகர் அர்ஜூனின் மகள். முன்பே பட்டத்து யானை படம் மூலம் வந்தார். அதன் பிறகு ஐந்து வருடங்கள் கழித்து இப்போது மீண்டும் வந்திருக்கிறார். அதுவும் தன் அப்பா இயக்கிய படத்தில். நன்றாக நடித்திருக்கிறார். ஆனால் சில இடங்களில் அதீதமான வசனங்கள் கொஞ்சம் சலிப்பு தட்டுகிறது.

படத்தின் இயக்குனரும் நடிகருமான அர்ஜுன் ஒரு கேமியோ ரோலில் வருகிறார். விமானத்துறை அதிகாரியாக. அதிலும் ஒரு பாடல் இவருக்காகவே படத்தின் இடையில். பொருந்தும் படியாக அமைந்ததா என்றால் படக்குழுவை தான் கேட்கவேண்டும்.

மேலும் காமெடியன்கள் சதீஷ் சில இடங்களில் வந்தாலும் ஒரு பெரியளவில் காமெடிகள் இல்லை. ஆனாலும் யோகி பாபு இருந்தும் படத்தில் அவரை பயன்படுத்தாமல் விட்டார்களா இல்லை இவர் எடுத்துக்கொள்ளவில்லையா என சந்தேகம்.

மொட்டை ராஜேந்திரன் ஒரு அப்பாவாக நடித்திருக்கிறார். ஆனாலும் அபார்ட்மெண்ட் ஆண்ட்டிகளுடன் சேர்ந்து செய்யும் ரகளை கொஞ்சம் தூக்கல். அப்போது உள்ளே நுழைகிறார் மனோபாலா.

படத்தில் சில பதிவு செய்யப்பட்ட போர் காட்சிகள் மீண்டும் மீண்டும் வந்தது போல ஒரு ஃபீல்.

கிளாப்ஸ்

ராணுவ வீரர்களுக்காக இப்படம் எடுக்கப்பட்ட முயற்சியை பாராட்டலாம்.

இருக்கும் பாடல்களில் உயிரே உயிரே பாடல் மீண்டும் மீண்டும் நம்மை கேட்க தூண்டும்.

பல்பஸ்

வந்த ஜோரிலேயே அடுத்தடுத்து பாடல்கள் கொஞ்சம் ஆர்வத்தை குறைக்கிறது.

பட காட்சிகள் அமைப்பு, தொழில் நுட்ப விசயங்கள் என கவனம் செலுத்தியிருக்கலாம்.

ஹீரோயின் டையலாக்கில் கொஞ்சம் செண்டிமெண்ட்களை தவிர்த்திருக்கலாம்.

மொத்தத்தில் சொல்லிவிடவா ஓகே தான். இன்னும் பிளான் செய்து பக்காவாக சொல்லியிருக்கலாம் அர்ஜுன் சார்.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About