டி.ஆரை பொது நிகழ்ச்சியில் அழ வைத்த சிம்பு- இதுதான் காரணம்

சிம்பு சினிமாவில் எப்படிபட்ட பிரச்சனைகளை சந்தித்துள்ளார் என்பது நாம் எல்லோருக்குமே தெரிந்த விஷயம். ஆனால் அவரை போல் பல மீம்ஸ்களுக்கு ஆளானவர்...

சிம்பு சினிமாவில் எப்படிபட்ட பிரச்சனைகளை சந்தித்துள்ளார் என்பது நாம் எல்லோருக்குமே தெரிந்த விஷயம். ஆனால் அவரை போல் பல மீம்ஸ்களுக்கு ஆளானவர் அவரது அப்பா டி.ஆர்.

வாயில் இசை வாசிப்பது, தலைமுடி ஆட்டுவது போன்ற விஷயங்களால் அவர் நிறைய கலாய்க்கப்பட்டுள்ளார்.

இந்த நேரத்தில் பிரபல தொலைக்காட்சியில் டி.ஆர் அவர்கள் பாடல் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார். அப்போது நிகழ்ச்சியில் வீடியோ மூலம் பேசிய சிம்பு, இதுவரை தன் அப்பாவை கலாய்த்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

வாயில் இசை வாசிக்கிறார் என்பார்கள் உங்களால் அது முடியுமா, தலைமுடி ஆட்டுகிறார் என்கிறார்கள் இந்த வயசிலும் அவர் ஆட்டுகிறார் உனக்கு இந்த வயசிலேயே முடி இல்லை.

எந்த பெண்ணை பார்த்தாலும் உனக்கு ஏதாவது தோன்றும் ஆனால் ஒரே ஒரு பெண் தான் என்று வாழ்கிறார். நீ இப்போதே நிறைய போதைகளுக்கு அடிமையாகியிருப்பாய் ஆனால் அவருக்கு ஒரு கெட்ட பழக்கம் கூட கிடையாது.

இதுபோன்ற திறமை இல்லாதவன் தான் உங்களை கிண்டல் செய்கிறான். ஆனால் உங்கள் திறமையை அங்கீகரித்து உங்களை மதித்தவர்களை நான் மதிக்கிறேன் என்று மனம் உறுக பேசியுள்ளார். அதை கேட்ட டி.ஆர் அவர்களின் கண் கலங்கிவிட்டது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About