மனித இனத்தோடு இயற்கை மீண்டும் விளையாடப்போகிறதா?... கடலில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்

ஆஸ்திரேலியாவில் உள்ள ஹேம்லின் பே கடற்கரையில் கரை ஒதுங்கிய சுமார் 150 திமிங்கலங்களில் 6 திமிங்கலங்கள் மட்டுமே உயிர் பிழைத்துள்ளன. உயிரிழந்த ...

ஆஸ்திரேலியாவில் உள்ள ஹேம்லின் பே கடற்கரையில் கரை ஒதுங்கிய சுமார் 150 திமிங்கலங்களில் 6 திமிங்கலங்கள் மட்டுமே உயிர் பிழைத்துள்ளன.

உயிரிழந்த ஒட்டுமொத்த திமிங்கலங்களும் குறுகிய தடுப்பு கொண்ட பைலட் வகை ஆகும்.கடற்கரையில் ஒதுங்கி உயிரோடு இருக்கும் திமிங்கலங்களை காப்பாற்றி மீண்டும் கடலுக்குள் அனுப்ப கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால், மோசமான வானிலை காரணமாக இரவுக்குள் 140 திமிங்கலங்கள் உயிரிழந்தன. கடற்கரையில் ஒதுங்கிய திமிங்கலங்களை மீட்க நூற்றுக்கும் மேற்பட்ட ஆர்வலர்கள், வனத்துறை அதிகாரிகள் மற்றும் பலர் போராடினர்.

"இதுமாதிரி இவ்வளவு திமிங்கலங்கள் ஒன்றாக கரை ஒதுங்கியதை இதுவரை பார்த்ததில்லை" என்றுசுற்றுலா வாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இயற்கை பேரிடர் நிகழ்வதற்கான அறிகுறியாகவே இது போன்ற சம்பவங்கள் பார்க்கப்படுகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தோனேசியாவில் இப்படி கரையொதுங்கியதை அடுத்து உலகெங்கிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About