ஆர்யாவுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு? - அவரே கூறிய பதில்

தமிழ் சினிமாவில் அஜித், மாதவன் என்ற வரிசையில் பெண்களுக்கு பிடித்த நடிகர்களில் ஒருவர் நடிகர் ஆர்யா. இவருக்கு பலவருடங்களாக கல்யாணம் ஆகாமல் இர...

தமிழ் சினிமாவில் அஜித், மாதவன் என்ற வரிசையில் பெண்களுக்கு பிடித்த நடிகர்களில் ஒருவர் நடிகர் ஆர்யா. இவருக்கு பலவருடங்களாக கல்யாணம் ஆகாமல் இருப்பதால், பெண் தேடும் படலத்தையே எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற பெயரில் ஒரு ஷோவாக மாற்றியுள்ளனர்.

இந்த நிகழ்ச்சி தற்போது தான் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இன்று நடந்த ஷோவில் ஆர்யாவிடம் கலந்து கொண்ட பெண்கள் தங்கள் கேட்க நினைக்கும் கேள்விகளை பெயர் குறிப்பிடாமல் ஒரு பேப்பரில் எழுதி கேட்கலாம்.

அதில் ஒரு சீட்டில் உங்கள் 7 வருட காதல் வாழ்க்கையில் எது சிறந்த தருணம், வெறுத்த தருணம் என்ற கேள்விக்கு, "உண்மையில் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு, அவர்கள் கூட இருந்த அந்த 7வருடமும் சிறந்த தருணம் தான் கல்யாணம் என்றால் 30 நாட்கள் கழித்து பதிவு நடக்கும், என் தரப்பில் நடந்தது, ஆனால் அவர்கள் தரப்பில் நடக்கவில்லை.அவர்களின் குடும்ப சூழ்நிலை காரணமாக நடக்காமல் போனது நான் வெறுத்த தருணம்,

ஆனால் நான் காதலித்தவர் மேல் எந்த தவறும் இல்லை என்று உணர்ச்சிமிகு கூறினார் ஆர்யா

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About