தோளின் மேலே பாரமில்ல… தூக்கிப்போடு கவலையில்ல… தட் இஸ் ரஜினி!

‘ஊர்ல இருந்தா நம்மகிட்டயும் பத்து லட்சம் கொடுக்கச் சொல்லி படுத்துவாங்களோ?’ இப்படியொரு வாசகத்தை எழுதி, பக்கத்திலேயே ரஜினி படத்தையும் ஒட்டி க...

‘ஊர்ல இருந்தா நம்மகிட்டயும் பத்து லட்சம் கொடுக்கச் சொல்லி படுத்துவாங்களோ?’ இப்படியொரு வாசகத்தை எழுதி, பக்கத்திலேயே ரஜினி படத்தையும் ஒட்டி கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள் வலைதள வம்பர்கள். திருச்சியில் கர்பிணி உஷா டிராபிக் எஸ்.ஐ யின் அநியாய செயலால் உயிரிழந்தபின், மக்கள் நீதி மையம் சார்பில் 10 லட்சம் வழங்குவதாக அறிவித்தார் கமல். இதையடுத்துதான் மேற்படி மீம்ஸ்.

அதை நிரூபிப்பது போலவே ஏர்போர்ட்டில் ரஜினியின் செயலும் இருந்தது. இமயமலை கிளம்பியவரை இடை மறித்து, ஆன்மீக பயணம் பற்றி கேள்வி கேட்ட மீடியாவுக்கு சிரித்த முகத்துடன் பதிலளித்தார் ரஜினி. நடுவில் ஒரு நிருபர், இந்த வாரத்தில் இரண்டு பெண்கள் கொடூரமான முறையில் இறந்திருக்காங்க. அது பற்றி? என்று கேள்வி எழுப்ப, சட்டென சுதாரித்துக் கொண்ட ரஜினி, இரண்டு கைகளையும் எடுத்து கும்பிட்டுவிட்டு எடுத்தார் பயணம்… (ஓட்டம் என்று எழுத நமக்கே சங்கடமாக இருக்கிறது)

கட்… சினிமா ஸ்டிரைக் நடக்கிறதல்லவா? இந்த ஸ்டிரைக் ஏப்ரல் மே வரைக்கும் கூட நீடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து ரஜினியை தொடர்பு கொண்டார்களாம். சார்.. ஸ்டிரைக் நீடிச்சா, உங்க காலா ரிலீசும் தள்ளிப் போகும். நீங்க ஒத்துழைக்கணும் என்று கேட்க, அதுக்கென்ன… தாராளமா என்று கூறினாராம் ரஜினி.

இதற்கும் ஒரு கதையை சொல்லி கலங்க விடுகிறார்கள் இன்டஸ்ட்ரி குசும்பர்கள். காலா படத்தை லைக்காவிடம் விற்று பணமும் கை மாறிடுச்சு. இதுவே தனுஷ் கையில் படம் இருந்தா, ஐயோ மருமவனுக்கு சிக்கலாச்சேன்னு ரஜினி ஒத்துக்காம இருந்திருப்பார். இப்ப தோளின் மேல பாரம் இல்ல. சூப்பரா ஓகே சொல்லிட்டார் என்கிறார்கள்.

கடந்த முறை காலா ஷுட்டிங் நடந்தபோது பெப்ஸிக்கும் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் பிரச்சனை வந்து ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டபோது, அதை முறியடித்து ஷுட்டிங் வைக்கச் சொன்னவர் ரஜினி. அந்த அனுபவத்தில் இப்படி கலாட்டா பண்ணுகிறார்களோ என்னவோ?

அட… எப்ப பார்த்தாலும் ரஜினிய விமர்சிக்கறதே பொழப்பா போச்சு ரொம்ப பேருக்கு.

மேலும் பல...

0 comments

Search This Blog

Blog Archive

About